சென்னை ; அட்டையால் செய்யப்பட்ட மாதிரி வாக்கு பதிவு இயந்திரம் !! தவெக - விற்கு வாக்களித்த மக்கள்
சென்னையில் மாதிரி வாக்குப் பெட்டியில் தவெக - வின் விசில் சின்னத்திற்கு வாக்களித்த பொது மக்கள்

நெருங்கும் 2026 சட்டமன்ற தேர்தல்
வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி , பல்வேறு கட்சிகள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக சார்பில் 2 - ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து விட்டனர். இந்நிலையில் தவெக - விற்கு விசில் சின்னம் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்ட நிலையில் , கட்சி ஆரம்பித்து முதன் முறையாக சட்டமன்ற தேர்தலை தவெக - வினர் சந்திக்க இருக்கின்றனர்.
தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் தவெக கட்சியினர் நலத்திட்டம் , பொது கூட்டம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி பொதுமக்களிடம் தவெகவிற்கு வாக்களிக்க வேண்டும் என பணிகளை செய்து வருகின்றனர்.
மாதிரி வாக்கு பதிவு இயந்திரம்
சென்னை திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட சாத்துமா நகர் பகுதியில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறிய மாதிரி வாக்குப் பதிவு இயந்திரம் வடிவமைத்து , விசில் சின்னத்தில் வாக்களிக்க வேண்டி பிரச்சாரம் செய்தனர். அப்பொழுது பொதுமக்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் அட்டை பெட்டியால் தயார் செய்யப்பட்ட மாதிரி வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்களித்தனர். அதன் பின்னர் , புதிய உறுப்பினர்கள் 200 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. பொது மக்கள் 100 பேருக்கு காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.























