காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் அமைய உள்ள டிக்ஸன் டெக்னாலஜிஸ் நிறுவனம் 5000 பேருக்கு வேலை வாய்ப்பை வழங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொழிற்சாலைகள் நிறைந்த காஞ்சிபுரம் மாவட்டம்
சென்னை புறநகர் மாவட்டமாக இருக்கக்கூடிய காஞ்சிபுரம் மாவட்டம் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டமாக இருந்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. உலக அளவில் முன்னணி தொழில் நிறுவனங்களில், உற்பத்தி தொழிற்சாலையும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தான் அமைந்துள்ளது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில், 1000 கோடி ரூபாய் முதலீட்டில், மின்னணு உற்பத்தி ஆலை அமைக்க தமிழக அரசு, டிக்ஸன் டெக்னாலஜிஸ் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
சென்னை அடுத்த ஒரகடத்தில் அமைந்துள்ள தொழில் பூங்காவில், ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய டிக்ஸன் டெக்னாலஜிஸ் நிறுவனம் முன்வந்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் டிக்ஸன் டெக்னாலஜிஸ் நிறுவனம் புரிந்துணர் ஒப்பந்தத்தில் இணைந்து கையெழுத்திட்டுள்ளன.
டிக்ஸன் டெக்னாலஜிஸ் நிறுவனம்
டிக்ஸன் டெக்னாலஜிஸ் நிறுவனம் இந்த தொழில் பூங்காவில், ஒருங்கிணைந்த கணினிகள், லேப்டாப் கல் மற்றும் மின்னணு உற்பத்திய ஆலைய நிறுவ ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த 1993 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட டிக்ஸன் டெக்னாலஜிஸ் நிறுவனம் மின்னணு பொருட்கள், மின்னணு விளக்குகள், மொபைல் போன் ஆகிய மின்னணு பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றன. சாம்சங், மோட்டோரோலா, ஷாவ்மி, ஒன் பிளஸ் போன்ற நிறுவனங்களுக்கு ஒப்பந்த முறையில் பொருட்களை உற்பத்தி செய்து வழங்கி வருகிறது.
இந்த நிறுவனம் தற்போது ஒரகடத்தில் தொழிற்சாலை அமைப்பதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னணியில், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சார்ந்த இளைஞர்களுக்கு பெருமளவில் வேலைவாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிறுவனம் என்னென்ன பொருட்களை தயாரிக்கும் ?
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் அமைய உள்ள இந்த நிறுவனத்தில் மின்னணு பொருட்களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு நிறுவனங்களுக்கான லேப்டாப் மற்றும் ஒருங்கிணைந்த கணினி ஆகியவற்றை தயாரிக்கப்பட உள்ளது.
எவ்வளவு பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் ?
இந்த நிறுவனம் 5000 பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் அமைய உள்ளது. குறிப்பாக காஞ்சிபுரம் மற்றும் அதன் அருகே உள்ள செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு பெருமளவில் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.