சென்னையில் காவல் பெண் மீது கொடூர தாக்குதல்: போதை கணவன் வெறிச்செயல்
சென்னையில் நடந்த முக்கிய கிரைம் செய்திகளை கீழே காணலாம்.

பெண் போலீசை சரமாரியாக வெட்டிய போதை கணவர்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாரதி ( வயது 30 ) காவலராக பணி புரிந்து வருகிறார். இவரது கணவர் இளவரசன் ( வயது 35 ) இவர்களுக்கு ஏழு வயது மகன் உள்ளார். போதை பழக்கத்திற்கு அடிமையான இளவரசன், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதால் , தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். தற்போது , சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 'டெக்னிக்கல்' பிரிவில் பணிபுரியும் பாரதி , அயனாவரத்தில் மகனுடன் வசித்து வருகிறார். அதே நேரம், தேனியில் கஞ்சா வழக்கில் கைதான இளவசரன் , நான்கு மாதங்களுக்கு முன் , சிறையில் இருந்து வெளியில் வந்துள்ளார். இந்த நிலையில் பாரதியின் அண்ணன் மணிவண்ணன் , தம்பதி இருவரையும் சமாதானப்படுத்தினார்.
இதையடுத்து கடந்த ஒரு வாரமாக அயனாவரத்தில் உள்ள வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் இருவருக்குள்ளே பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரவு நேரத்தில் தம்பதி இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த இளவரசன் வீட்டில் இருந்த தேங்காய் வெட்டும் அரிவாளால் , பாரதியின் தலையில் மூன்று இடங்களில் வெட்டியுள்ளார். பின் முதுகு, இடது முழங்கை என பல இடங்களில் சரமாரியாக அடித்துள்ளார். வலது கால், தொடைகளிலும் அரிவாளால் சரமாரியாக கொத்திய படி வெட்டி , பலத்த காயம் ஏற்படுத்தியுள்ளார். காயமடைந்த பாரதி வீட்டிருந்து தப்பி , சக ஊழியர்கள் உதவியுடன் , கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அயனாவரம் போலீசார் இளவரசனை கைது செய்தனர்.
கொலை செய்து விட்டு , 12 ஆண்டுகளாக சாமியார் போல சுற்றிய நபர்
சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் ஜானகிராமன் ( வயது 41 ) ரவுடியாக வலம் வந்த இவர் கடந்த 2004 - ம் ஆண்டு ஜோன்ஸ் என்பவரை கொலை செய்துள்ளார். அயனாவரம் , அண்ணாநகர் , ஆர்.கே., நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் , கொலை முயற்சி உட்பட 21 வழக்குகள் உள்ளன. இதையடுத்து , 'ஏ' பிரிவு ரவுடிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் , வழக்கு தொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். ஜானகிராமனை பிடிக்க நீதிமன்றம் ஐந்து முறை 'பிடிவாரன்ட்' பிறப்பித்திருந்தது. ஆனால் போலீசிடம் சிக்காமல் 12 ஆண்டுகளாக தண்ணி காட்டி வந்துள்ளார். இதனிடையே சேலம் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் அவர் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அங்கு சென்ற போலீசார் , ஜானகிராமனை மடக்கி பிடித்து ஓட்டேரி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். தற்போது எந்தவித குற்றச் செயல்களிலும் ஈடுபடுவதில்லை எனவும் , கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு கோவில்களுக்கு சென்று , துாய்மை பணி செய்து வருகிறேன் எனவும் வாக்கு மூலம் அளித்துள்ளார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Before You Go
Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
ட்ரெண்டிங் செய்திகள்






















