சென்னையில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் வசூலிக்கக்க சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளதாக சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
முதற்கட்டமாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விதிகளை மீறுவோர் மீது அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என சென்னை மாநகராட்சி ஏற்கனவே அறிவித்தது. இந்தநிலையில், மக்கள் அதிகம் கூடும் உணவகம், திரையரங்கு போன்ற இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நேற்றைய கொரோனா பாதிப்பு :
தமிழ்நாட்டில், நேற்று புதிதாக 2,654 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1,066 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
தொடர்ந்து தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் மக்களிடையே பயம் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே காரைக்காலில் காலரா பரவலால் விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்களுக்கு நோய்கள் குறித்த பயம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்தாலும், தொற்றினால் உயிரிழப்பு இல்லை என்பது சற்று ஆறுதலாக இருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்