Chennai metro: சென்னையில் மெட்ரோ ரயில் சேவைகள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது. 


சென்னையில் உள்ள போக்குவரத்துகளில் மிகவும் முக்கியமானது இந்த மெட்ரோ ரயில் சேவை. நாள்தோறும் ஏராளமான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். சென்னையில் நிலவும் இந்த போக்குவரத்து பிரச்சைக்கு தீர்வு காணும் வகையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது.


சென்னையில் தற்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. ஒரு வழி சென்னை விம்கோ நகரில் இருந்து அண்ணா சாலை வழியாக விமான நிலையம் வரையும் மற்றொன்று சென்னை சென்ட்ரலிலிருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் வரைவும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மெட்ரோ ரயில்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தனியார், அரசு ஊழியர்கள் என அனைத்து மக்களும் இதன் மூலம் பயனடைந்து வருகின்றனர்.


இந்நிலையில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கிறது.  கடந்த மூன்று நாட்களாகவே தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் மெட்ரோவில் பயணிக்கவே மக்கள் அதிகமாக முற்படுவார்கள்.






இதனால் மக்கள் பெரும்பாலானோர் பேருந்துகளில் பயணம் செய்வதை விரும்பாமல் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். இதனால் வாடிக்கையாக இல்லாமல், மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொள்வோர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.


இந்நிலையில், இன்று மாலையில் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய ஏராளமானோர் வந்திருந்தனர். அப்போது தான், சுமார் 7 மணியளவில் சென்னை சென்ட்ரலிலிருந்து விமானநிலையம் செல்லும் பச்சை வழித்தடத்தில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் அந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இந்த பிரச்சனை தொடர்பாக பயணிகள் இணையத்தில் புகார்கள் தெரிவித்தனர்.


சென்னை சென்ட்ரலிலிருந்து விமானநிலையம் செல்லும் பச்சை வழித்தடத்தில் தொழில்நுட்ப கோளாறு  காரணமாக பாதிப்பு ஏற்பட்டது. அதாவது அசோக்பில்லர் - ஈக்காட்டுத்தாங்கல் இடையேயான மெட்ரோ ரயில் பாதையில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டதன் விளைவாக ஒரு வழித்தடத்தில் மட்டுமே மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒருமணி நேரத்திற்கு மேலாக இந்த கோளாறு சரிசெய்யப்படவில்லை. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு தொழில்நுட்பக்கோளாறு சரிசெய்யப்பட்டது. இதையடுத்து மெட்ரோ ரயில் சேவை வழக்கம்போல் இயங்கப்பட்டது.