தலைநகர் சென்னையில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பொது போக்குவரத்தில் மெட்ரோ ரயில் சேவையும் ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் குறிப்பிட்ட 18 மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பார்க்கிங்கிற்கான கட்டணம் கணிசமாக உயர்த்தபடுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. 


அதாவது நந்தனம், திருவொற்றியூர், தேரடி, வண்ணார் பேட்டை, புது வண்ணார்பேட்டை, மண்ணடி, காலடிப்பேட்டை, உயர்நீதிமன்றம், அரசினர் தோட்டம், எல்.ஐ.சி, கிண்டி, ஆலந்தூர், நங்கநல்லூர், மீனம்பாக்கம், விமானநிலையம், அசோக்நகர், திருமங்கலம், எழும்பூர் உள்ளிட்ட 18 மெட்ரோ நிலையங்களில் பார்க்கிங் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த குறிப்பிட்ட மெட்ரோ நிலையங்களை தவிர்த்து மற்ற நிலைய பார்க்கிங் கட்டணங்களில் எவ்வித மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மெட்ரோ ரயில்களில் பயணிக்காமல் பார்க்கிங் மட்டும் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மெட்ரோ நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.