Chennai Metro Rail: பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஞாயிற்றிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொங்கல் விடுமுறை:


தைத்திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் 15-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. 15-ஆம் தேதி பொங்கல் பண்டிகை, 16-ஆம் தேதி மாட்டுப் பொங்கல், 17 ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. தொடர் விடுமுறை என்பதால் நேற்று முதலே சொந்த ஊருக்கு மக்கள் படையெடுக்க தொடங்கிவிட்டனர். 


இதற்காக தலைநகர் சென்னையில் பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் சென்னையில் இருந்து மக்கள் வெளியேறுவதால், விடுமுறை முடியும் வரை நகரில் பெரியதாக எங்கும் போக்குவரத்து நெரிசல் இருக்காது. அதாவது, 17-ஆம் தேதி டிராபிக் இருக்காது.


இந்த விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில்கள் இயங்குமா என்ற கேள்வி மக்கள் மத்தியல் எழுந்துள்ளது.  இந்த நிலையில், தான் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.  


சென்னை மெட்ரோ ரயில் அறிவிப்பு:


இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, "2024 ஆம் ஆண்டு ஜனவரி 15, 16 மற்றும் 17-ஆம் தேதிகளில் ஞாயிற்றுக்கிழமையின் அட்டவணையின் படி மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.


பொங்கல் விடுமுறையை முன்னிட்டு 2024 ஆம் ஆண்டு ஜனவரி 15 (திங்கட்கிழமை), 16 (செவ்வாய்க்கிழமை) மற்றும் 17 (புதன்கிழமை) ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமையின் அட்டவணையின் படி மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.  காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். 


காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். 


மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.  இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். மெட்ரோ இரயில் பயணிகள் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


புறநகர் ரயில்கள்:


அதேபோல, சென்னை புறநகர் ரயில் சேவையும் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்டிரல் - அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, சூளூர்பேட்டை, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கங்களில் ஞாயிறு அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 




மேலும் படிக்க


உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி என்பது வதந்தி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்


Election Commissioner : சட்டத்துக்கு எப்படி தடைவிதிக்க முடியும்? தேர்தல் ஆணையர்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அதிரடி முடிவு