Chennai Metro Rail: சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் கவுன்டர் மூலம் பயணிகள் டிக்கெட் பெறும் வசதி அறிமுகமாக உள்ளது.


சென்னை மெட்ரோ ரயில்


சென்னையில் உள்ள போக்குவரத்துகளில் மிகவும் முக்கியமானது இந்த மெட்ரோ ரயில் சேவை. நாள்தோறும் ஏராளமான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். சென்னையில் நிலவும் இந்த போக்குவரத்து பிரச்சைக்கு தீர்வு காணும் வகையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. சென்னையில் தற்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி வழியாக ஆலந்தூரை அடையும் வகையில் ஒரு வழித்தடம் உள்ளது. 


அதேபோல், சைதாப்பேட்டை ஆயிரம் விளக்கு, நந்தனம் வழியாக மறு வழித்தடமும் உள்ளது. இந்த மெட்ரோ ரயில்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் அதிக அளவில் மெட்ரோவை பயன்படுத்துவதற்கான பல்வேறு சலுகைகளையும் மெட்ரோ நிர்வாகம் வழங்கி வருகிறது. 


டிக்கெட் பெறும் வசதி: 


ஏற்கனவே பயண அட்டை, கியூ ஆர் கோடு, வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி இருக்கிறது. இதில் அடுத்த கட்டமாக புதிய வசதியை மெட்ரோ நிர்வாகம் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது, சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டு  இருக்கும் தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்கள் மூலம் பயணிகள் தங்கள் வங்கி டெபிட் அல்லது க்ரிடிட் கார்டுகளை பயன்படுத்தி  கட்டணம் செலுத்தி டிக்கெட்டுகளை பெறும் புதிய வசதியை மெட்ரோ நிர்வாகம் அறிமுகம் செய்ய உள்ளது.  வாட்ஸ் ஆப் மற்றும் கியூ ஆர் கோடு மூலம் பயணிகள் டிக்கெட் பெறுவதில்  தொழிற்நுட்ப கோளாறு ஏற்படுவதாக புகார் எழுந்ததை அடுத்து மெட்ரோ ரயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 


எப்போது அறிமுகம்? 


இதுகுறித்து சிஎம்ஆர்எல் அதிகாரிகள் கூறுகையில், ”பயணிகள் டிக்கெட் வாங்குவதை எளிதாக்கும் வகையில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி டிக்கெட்களை பெறலாம். இந்த வசதி எப்போது செயல்படுத்தப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. QR கோடு, வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் பெறுவதில் சில சிக்கல்கள் இருப்பதாக புகார் வந்துள்ளது. ஆனால் தானியங்கி இயந்திரம் மூலம் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினால் இதுபோன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க முடியும்" என்றனர். அதேபோன்று, டோக்கன் டிக்கெட்களை படிப்படியாக நிறுத்தவும் மெட்ரோ நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




மேலும் படிக்க 


அப்படிபோடு! ஒருவழியாக தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க சம்மதித்த கர்நாடகா! ஆனால் ஒரு ட்விஸ்ட்!