மெட்ரோ இரயில் நிலையத்தில் பயணிகளின் நுழைவு மற்றும் வெளியேற்றத்தை எளிதாக்குவதற்காக தானியங்கி கட்டண நுழைவாயில் பயன்படுத்தும் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ நுழைவுவாயில் மாற்றம்:

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மெட்ரோ இரயில் நிலையத்தில் பயணிகளின் நுழைவு மற்றும் வெளியேற்றத்தை எளிதாக்குவதற்காக தானியங்கி கட்டண நுழைவுவாயிலில் ஒரு புதிய முறையை சோதனை அடிப்படையில் செயல்படுத்தியுள்ளது. அதாவது, இதற்கு முன்பு தங்களது பயண அட்டையையோ அல்லது கியு ஆர் கோர்டையோ ஒப்புதலுக்காக காண்பிக்க வேண்டும். இதையடுத்து காண்பித்தவுடன் கதவு போன்ற அமைப்பு திறக்கும். ஆனால், தற்போது  கதவு போன்ற அமைப்பானது திறந்தே இருக்கும். அடையாள அட்டை மற்றும் க்யூ ஆர் கோர்டை வைத்து விட்டுச் சென்று கொண்டே இருக்கலாம். இதன் மூலம், கதவு திறந்து மற்றும் மூடும் நேரம் குறையும். இதன் மூலம் கால அளவு குறையும். இதையடுத்து பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பானது குறையும். 

Also Read: மக்களே உஷார்...19 மாவட்டங்களில் 100ஐ தாண்டும் வெயில்!

நுழைவாயில் சோதனை:

இந்த சோதனையை ஆயிரம் விளக்கு மெட்ரோ இரயில் நிலையத்தில் செய்து வருவதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.  இங்கு காலை மற்றும் மாலை வேலை நேரங்களில் அதிகப்படியான வேலைக்குச் செல்வோர்கள் வருவதால், நீண்டு நேரம் காத்திருக்கின்றனர். இதனால், இந்த சோதனையை இங்கு மேற்கொள்ள திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் நிலையத்தில் அனைத்து தானியங்கி கட்டண நுழைவு வாயில்களும் காலை 08:00 மணி முதல் 11:00 மணி வரை மற்றும் மாலை 05:00 மணிமுதல் 08:00 மணி வரை “Normally Open” முறையில் செயல்படஉள்ளன. 

இதுகுறித்து சென்னை மெட்ரோ நிர்வாக தரப்பு தெரிவித்துள்ளதாவது, நுழைவு மற்றும் வெளியேறும் வாயிலில் ஒப்புதல்களுக்கு இந்த முயற்சி, நெரிசல் மிகு நேரங்களில் பயணத்தை எளிதாக்கவும், பயணிகள் நீண்ட வரிசையில் நிற்கும் நேரத்தை குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டது.

Normally Open முறையின் கீழ், தானியங்கி கட்டண நுழைவு வாயில்களின் கதவுகள் திறந்த நிலையில் இருக்கும், இதனால் பயணிகள் விரைவாகக் கடந்து செல்ல முடியும். எனினும், பயண கட்டண சரிபார்ப்பை உறுதி செய்யும் வகையில், பயணிகள் தங்கள் பயண அட்டை அல்லது QR பயணச்சீட்டை தானியங்கி கட்டண நுழைவு வாயில்களில் ஸ்கேன் செய்ய வேண்டும்.

நுழைவாயில் செயல்படும் முறை:

i. பயணச்சீட்டு சரிபார்ப்பு வெற்றிகரமாக இருந்தால், பச்சை விளக்கு தெரியும், மேலும் பயணிகள் தானியங்கி கட்டண நுழைவு வாயிலை கடந்து செல்லலாம்.ii. சிவப்பு விளக்கு தெரிந்தால் அல்லது எந்த பதிலும் கிடைக்காவிட்டால், பயணிகள் மீண்டும் முயற்சிக்க வேண்டும் அல்லது பயணச்சீட்டு கவுண்டர்களில் பயணச்சீட்டை சரிபார்க்க வேண்டியது அவசியம்iii. சரியான பயணச்சீட்டு இல்லாமல் நுழைய முயற்சித்தால், தானியங்கி கட்டண நுழைவுவாயில்களின் கணினி அமைப்பு தானாகவே கதவுகளை மூடி விடும், அதனால் அங்கீகரிக்கப்படாத நுழைவு தடுக்கப்படும்.

மேலும் இதுதொடர்பாக உதவி அல்லது கருத்துகளை தெரிவிக்க, மெட்ரோ இரயில் நிலையத்தில்  உள்ள பணியாளர்களை அணுகலாம், அல்லது http://chennaimetrorail.org என்ற இணையதளத்தில் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.  இதன் மூலம் பயணிகள் பல மணி நேரம் காத்திருக்க தேவையில்லை.