மேலும் அறிய

சீமைக்கருவேல மரங்களுக்கு இணையாக நாட்டு மரங்களை நட வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்

ஊரக வளர்ச்சித் துறை அறிக்கைக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, ஏலம் விடுவது தொடர்பான குழுவை 15 நாட்களில் அமைக்க உத்தரவிட்டனர்.

சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாக்கும் வகையில், அகற்றப்படும் சீமைக்கருவேல மரங்களுக்கு இணையாக நாட்டு மரங்களை நட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
 
தமிழகம் முழுவதும் சீமைக்கருவேல மரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்திருந்த வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில்  மீண்டும் விசாரணைக்கு வந்தன.
 
அப்போது வனத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. வனத்துறை தாக்கல் செய்த அறிக்கையில், வனப்பகுதியில், 1,325 ஹெக்டேர் பரப்பில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதாகவும், நபார்டு திட்டத்தின் கீழ் அவற்றை அகற்ற திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுவரை 281 ஹெக்டேர் அகற்றப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள இடங்களில்  ஓராண்டு காலத்தில் அகற்றப்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
ஊரக வளர்ச்சித் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கிராம பஞ்சாயத்துக்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்துவதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், 45 லட்சம் ரூபாய் செலவு செய்து, மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும், அந்த   மரங்களை ஏலம் விட்டு அதன் மூலம் வருவாய் ஈட்ட ஏதுவாக மாவட்டம் தோறும்  குழுக்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
 
ஊரக வளர்ச்சித் துறை அறிக்கைக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, ஏலம் விடுவது தொடர்பான குழுவை 15 நாட்களில் அமைக்க உத்தரவிட்டனர். மேலும், சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாக்கும் வகையில், அகற்றப்படும் சீமைக்கருவேல மரங்களுக்கு இணையாக நாட்டு மரங்களை நட வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், இப்பணியை  பசுமை  தமிழ்நாடு திட்டத்தின் கீழ் சேர்க்க வேண்டும் எனவும், நீர்நிலைகளில் ஒரு லட்சத்து 19 லட்சம் ஹெக்டேர் பரப்பில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களில்   2750 ஹெக்டேர் பரப்பில் அமட்டும் அகற்றப்பட்டுள்ளதால், மீதமுள்ள பரப்பில் சீமை கருவேல மரங்களை அகற்ற பொது ஏலம் நடத்த உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 24ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
 
விசாரணைக்கு பின், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் ஐந்து இடங்களில் மஞ்சள் பை வழங்கும் இயந்திரங்கள் அமைக்க உள்ளதாகவும், பிளாஸ்டிக் பொருட்களை அழிக்கும் இயந்திரங்கள் வரும் 10ம் தேதி அமைக்க உள்ளதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
Embed widget