சாதி, மதம் இல்லை என்ற சான்றிதழை இரண்டு வாரத்தில் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


சென்னை அண்ணாநகரை சேர்ந்த மனோஜ் குமார் என்பவர் தனது மகன் யுவன் மனோஜுக்கு சாதி, மதம் இல்லை என்ற சான்றிதழ் வழங்கக் கோரி விண்ணப்பித்திருந்தார். அக்டோபரில் தனது மகனை பள்ளியில் சேர்க்க உள்ளதால் அதற்குள் சாதை, மதம் இல்லை என வேண்டும் என்று தாசில்தாரிடம் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க : மீண்டும் சன் டிவி சீரியலில் நடிகை ராதிகா… பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்… என்ன சீரியல் அது?


மனோஜ் கோரியபடி அம்பத்தூர் தாசில்தார் சான்றிதழ் வழங்காததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், “ தான் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும், இரு வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி உயர் சாதிப் பெண்ணை திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு கடந்த 2016ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. 


மேலும் படிக்க : குழந்தை கைப்பையில் துப்பாக்கி குண்டு... பரபரப்பான சென்னை விமான நிலையம்..!


இதையடுத்து தற்போது தனது மகனை அம்பத்தூரில் உள்ள பள்ளியில் சேர்த்தபோது, அங்குள்ள பள்ளி நிர்வாகிகள் ஜாதி, மதம் தொடர்பான பார்மில் பில் பண்ண சொல்லியுள்ளனர். அப்போது மனோஜ் குமார் மறுத்ததால் குழந்தைக்கு அனுமதி மறுக்கப்பட்டது.






இந்த வழக்கானது இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபது அப்துல் குத்தூஸ், சாதி, மதம் இல்லை என்ற சான்றிதழ் கோரி விண்ணப்பித்தவருக்கு சான்றிதழ் பெற மனுதாரருக்கு உரிமை உண்டு என்று சான்றிதழ் வழங்குவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. இந்த சமர்ப்பிப்பைப் பதிவு செய்த நீதிபதி குத்தோஸ், மனுதாரர் வேண்டிக்கொண்டபடி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இரண்டு வாரங்களில் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.