Chennai : சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக புறநகர் ரயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையிலிருந்து 6 வழிகளில் புறநகர் ரயில்கள் இயக்கப்படுகிறது. சென்ட்ரல்-அரக்கோணம், சென்ட்ரல்-ஜோலார்பேட்டை, சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி, சென்ட்ரல்-நெல்லூர், மெரினா கடற்கரை-தாம்பரம், மெரினா கடற்கரை-விழுப்புரம் ஆகிய தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த வழித்தடங்களில் பராமரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அதனால் மேற்கண்ட சில வழித்தடங்களில் மாற்றங்களை தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
- மூர் மார்க்கெட்- பட்டாபிராம் மிலிட்டரி சைட்டிங் இடையே வழக்கமாக இரவு 10.30 மணிக்கு இயக்கப்படும் ரயில் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
- அதேபோல் பட்டாபிராம் மிலிட்டரி சைட்டிங்-ஆவடி இடையே வழக்கமாக இரவு 11.55க்கு இயக்கப்படும் ரயில் இன்று முதல் ஏப்ரல் 25ஆம் தேதி ரத்து செய்யப்படும்.
- பட்டாபிராம் மிலிட்டரி சைட்டிங்-மூர் மார்க்கெட்டுக்கு இரவு 10.45 மணிக்கு இயக்கப்படும் ரயில் ஆவடி மற்றும் மூர் மார்க்கெட் பகுதியாக ரத்து செய்யப்படும்.
- மூர் மார்க்கெட்-ஆவடி இடையே இரவு 11.30 மணிக்கு இயக்கப்படும் ரயில், மூர் மார்க்கெட் மற்றும் வியாசர்பாடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
- கும்மிடிப்பூண்டி-மூர் மார்க்கெட் இடையே காலை 4.50 மணிக்கு இயக்கப்படும் ரயில் பேசின் பிரிட்ஜ் மற்றும் மூர் மார்க்கெட் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
- சூல்லூர்பேட்டை-மூர் மார்க்கெட் இடையே காலை 5 மணிக்கு இயக்கப்படும் ரயில் பேசின் பிரிட்ஜ் மற்றும் மூர் மார்க்கெட் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
- சூல்லூர்பேட்டை-மூர் மார்க்கெட் இடையே காலை 7.30 மணிக்கு இயக்கப்படும் ரயில் மூர் மார்க்கெட் மற்றும் பேசின் பிரிட்ஜ் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
- சூல்லூர்பேட்டை-மூர் மார்க்கெட் இடையே இரவு 9.45 மணிக்கு இயக்கப்படும் ரயில் கொருக்குபேட்டை மற்றும் மூர் மார்க்கெட் இடைய பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
- சென்னை- திருவள்ளுர் இடையே இரவு 11.15 மணிக்கு இயக்கப்படும் ரயில் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11 மணிக்கு இயக்கப்படும்.
- சென்ட்ரல்-ஆவடி இடையே இரவு 11.45 மணிக்கு இயக்கப்படும் ரயில் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.40 மணிக்கு இயக்கப்படும்.
- சென்ட்ரல்-ஆவடி இடையே நள்ளிரவு 12.15 மணிக்கு இயக்கப்படும் ரயில் சென்னை கடற்கரையில் இருந்து நள்ளிரவு 12.20 மணிக்கு இயக்கப்படும்.
- மூர் மார்க்கெட்-அரக்கோணம் இடையே காலை 10.45 மணிக்கு இயக்கப்படும் ரயிலானது, மூர் மார்க்கெட்டில் இருந்து 11 மணிக்கு இயக்கப்படும்.
- மூர் மார்க்கெட்-கும்மிடிப்பூண்டியில் இரவு 11.20 மணிக்கு புறப்படும் ரயிலானது, முர் மார்க்கெட்டில் இருந்து இரவு 11 மணிக்கு இயக்கப்படும்.
இந்த மேற்கண்ட மாற்றங்கள் அனைத்தும் ஏப்ரல் 1ஆம் தேதி (இன்று) முதல் ஏப்ரல் 25ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.