Ecr International Convention Centre : சென்னை புறநகர் பகுதியில் உலக தரம் வாய்ந்த பண்பாட்டு அரங்கம் அமைக்கப்பட வேண்டும் என சமீப காலமாக கோரிக்கை எழுந்திருந்தது. இந்தநிலையில் சென்னையில் உலகத்தரம் வாய்ந்த பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

கலைஞர் பன்னாட்டு அரங்கம் - Kalaignar International Convention Centre‌

உலக அளவில் `BEST IN CLASS' பன்னாட்டு அரங்கமாக இது அமைய வேண்டும்" எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். உலகளாவிய தொழில் கண்காட்சிகள், வர்த்தக மாநாடுகள், தொழில்நுட்பக் கூட்டங்கள், உலக நிறுவனங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள், உலகத் திரைப்பட விழாக்கள் போன்றவை நடக்கும் இடமாக "கலைஞர் பன்னாட்டு அரங்கம்" அமைய உள்ளது. 

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, செங்கல்பட் மாவட்டம் கோவளம் அடுத்த முட்டுக்காடு பகுதியில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை அருகே, சுமார் 525 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பன்னாட்டு அரங்கம் கட்டுவதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளது. முட்டுக்காடு பகுதியில் சுமார் 37 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, சென்னை கிழக்கு கடற்கரை சாலை மற்றும் கடற்கரைக்கு இடையில் இந்த பிரம்மாண்ட பன்னாட்டு அரங்கம் கட்டப்பட உள்ளது. 

இதையும் படிங்க: அடேங்கப்பா! தமிழ்நாட்டின் 5 முதலமைச்சர்கள் சேந்து நடிச்ச ஒரே படம் இதுதான்!

பன்னாட்டு அரங்கம் சிறப்பம்சங்கள் என்னென்ன? Kalaignar International Convention Centre project 

உலக தரத்தில் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது. 37 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைய உள்ளது. இங்கு ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் அமரக்கூடிய அரங்கம், 1500 பேர் அமரக்கூடிய மிகப்பெரிய விழா மண்டபம், நான்காயிரம் பேர் வந்து செல்லக்கூடிய கண்காட்சி கூடம் என பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கி இந்த அரங்கம் அமைய உள்ளது. 

இந்த பன்னாட்டு அரங்கத்தில் திறந்தவெளி அரங்கம், உணவு விடுதிகள், சுமார் 10,000 வாகனங்களை நிறுத்தும் அளவுக்கு வாகன நிறுத்த வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கான பணிகளை பொதுப்பணி துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

இதையும் படிங்க: சென்னை ரிட்டர்ன் வர்றீங்களா? எக்கச்சக்க மாற்றங்கள்! வாகன ஓட்டிகளே உஷார்..!

நிபந்தனைகள் என்னென்ன ?

கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைப்பதற்கு கடலோர ஒழுங்குமுறை விதிகளின்படி ஒப்புதல் பெற பொதுப்பணித்துறை விண்ணப்பித்திருந்தது. இது தொடர்பாக தமிழக கடலோர மண்டல குழு சமீப கூட்டத்தில் ஆய்வு செய்து ஒப்புதல் அளித்துள்ளது. முட்டுக்காடு பன்னாட்டு அரங்கம் திட்டத்தை செயல்படுத்த அங்கு நிலத்தடி நீரை உறிஞ்சக் கூடாது.

கழிவுநீர் மேலாண்மை எவ்வாறு செய்யப்பட உள்ளது, கழிவுகளை கடலில் கலக்கக்கூடாது. சுற்றுவட்டாரப் பகுதிகளை மேம்பாடு செய்ய என்னென்ன திட்டங்கள் உள்ளது. சுற்றுவட்டார கிராமங்களை மேம்படுத்த பொதுப்பணித்துறை 5 கோடி ரூபாய் அளிக்க வேண்டும். மழைநீர் சேகரிப்பு திட்டம் மற்றும் மறுசுழற்சி விதிமுறைகளை கையாள வேண்டும் உள்ளிட்ட 25 நிபதனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அடுத்த கட்ட ஒப்புதல் பெற அதிகாரிகள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.