பார்சல் கொடுக்க வந்த டெலிவரி பாய் பெண்ணிடம் அத்துமீறல் !! சென்னையில் பரபரப்பு
தண்ணீர் கேட்டு விட்டு வீட்டுக்குள் நுழைந்த டெலிவரி பாய். பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் கைது

பார்சல் கொண்டு வந்த டெலிவரி பாய்
சென்னை அமைந்தகரை பகுதியில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வரும் 31 வயது பெண் ஒருவர் ஆன்லைனில் பொருள் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். கடந்த மாதம் 31 - ம் தேதி அன்று மதியம், மேற்படி பொருளை டெலிவரி செய்ய அந்த நிறுவனத்தின் டெலிவரி பாய் பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண்ணிடம் பார்சலை கொடுத்துள்ளார்.
பார்சலை கொடுத்து , குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். உடனே அப்பெண் தண்ணீர் எடுக்க வீட்டினுள்ளே சென்ற போது, அந்த நபரும் பெண்ணின் பின்னாலே சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் திரும்பவே, அந்த நபர் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தப்பிச் சென்றுள்ளார்.
காவல் நிலையத்தில் புகார்
தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட டெலிவரி பாய் மீது நடவடிக்கை எடுக்கும் படி , பாதிக்கப்பட்ட அப்பெண் அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில், வழக்குப் பதிவு செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அமைந்தகரை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை செய்து , செல்போன் எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டு குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட டெலிவரி பாய் , அயனாவரம் பகுதியை சேர்ந்த லோகேஷ் ( வயது 22 ) என்பவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட லோகேஷ் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
Before You Go
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
ட்ரெண்டிங் செய்திகள்





















