சென்னை மாநகராட்சியில், கடந்த 15 ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்கும் அவகாசம் செப்டம்பர் 26ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Birth Certificate: பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயர் சேர்க்க வேண்டுமா? கடைசி தேதி, வழிமுறைகள் என்ன?
Chennai Birth Certificate: பிறப்புச் சான்றிதழில் குழந்தை பெயரை சேர்ப்பதற்கான அவகாசத்தை, செப்டம்பர் 26ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Chennai Birth Certificate: கடந்த 15 ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழிற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம், செப்டம்பர் 26ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான பிறப்பு சான்றிதழ்
தமிழ்நாடு அரசின் அறிவிப்பை தொடர்ந்து, பிறப்பு சான்றிதழுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை, வரும் செப்டம்பர் 26ம் தேதி வரை நீட்டித்து, சென்னை மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “பிறப்பை பதிவு செய்வது என்பது குழந்தைக்கான முதல் உரிமை ஆகும். சட்டப்பூர்வ குடியுரிமைக்கான ஆதாரமாக பிறப்புச் சான்றிதழ் கருதப்படுகிறது. பிறப்பு மற்றும் இறப்பை பதிவு செய்யும் சட்டத்தின்படி, குழந்தை பிறந்த 21 நாட்களில் அதனை பதிவு செய்து எந்தவித செலவும் இன்றி சான்றிதழை பெறலாம். ஆனால், அந்த சான்றிதழில் குழந்தையின் பெயர் நிரப்பப்பட்ட பிறகே அது முழுமையடைகிறது.
12 மாதங்களை கடந்தால் கட்டணம்
எனவே, பெயர் குறிப்பிடப்படாமல் குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்டு இருந்தால், அடுத்த 12 மாதங்களுக்குள் பெற்றோர் அல்லது பாதுகாவலர் குழந்தையின் பெயரை எந்தவித கட்டணமும் இன்றி சான்றிதழில் சேர்க்கலாம். இதற்காக, பிறப்பு மற்றும் இறப்பு தொடர்பான பதிவாளரை அணுகி கோரிக்கை கடிதத்தை சமர்பித்தாலே போதும். 12 மாதங்களை கடந்துவிட்டால் அடுத்த 15 ஆண்டுகளுக்குள் அந்த சான்றிதழில் குழந்தையின் பெயரை சேர்க்க முடியும். ஆனால், அதற்கு குறிப்பிட்ட அளவிலான கட்டணத்தை செலுத்த வேண்டி இருக்கும்.
விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
அப்படி பதிவு செய்யப்பட்ட பிறப்பு சான்றிதழில் கடந்த 15 ஆண்டுகளாக பெயர் சேர்கப்படாமல் உள்ள நபர்களுக்கான அவகாசத்தை தான், தற்போது அரசு வரும் செப்டம்பர் 26ம் தேதி வரை நீட்டித்துள்ளது. பொதுமக்கள் எதிர்கொள்ளும் இடையூறுகளை தவிர்க்கும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிறப்பு சான்றிதழ் - விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பதாரர்கள் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையத்தின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் அலுவலகம் அல்லது குறிப்பிட்ட மண்டல அலுவலகங்களை அணுகலாம். அப்போது பிறப்பு சான்றிதழின் நகல், பள்ளி அல்லது கல்லூரி சான்றிதழ், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல் மற்றும் குடும்ப அட்டை நகர் ஆகியவற்றை கொண்டு செல்லுங்கள். விவரத்தை சொல்லி அவர்கள் கொடுக்கும் படிவத்தை நிரப்பி சமர்பித்தால், பயனர்கள் பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழை அடுத்த சில தினங்களில் பெறமுடியும்.
பிறப்பு சான்றிதழ் - ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?
ஏற்கனவே விண்ணபித்து பிறப்பு சான்றிதழை பெயருடன் உறுதி செய்தவர்கள், அதை ஆன்லைனில் எப்படி பதிவிறக்கம் செய்வது என கீழே விவரிக்கப்பட்டுள்ளது. அதன்படி,
- சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் ஆன்லைன் சேவைகளுக்கான அதிகாரப்பூர்வ, இணையதள முகவரியை அணுகுங்கள்
- உள்ளே நுழைந்ததும் பிறப்பு மற்றும் இறப்பு எனும் ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்
- அடுத்த திரையில் பிறப்பு சான்றிதழ் தரவிறக்கம் என்பதை க்ளிக் செய்யுங்கள்
- ஏற்கனவே அந்த முகவரியில் நீங்கள் முன்பதிவு செய்து இருந்தால் உங்களது மொபைல் எண்ணை உள்ளீடு செய்து, அதற்கு வரும் ஒடிபியை பதிவிட்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறுங்கள்
- திரையில் கேட்கப்படும் பதிவு செய்யப்பட்ட சான்றிதழின் எண், குழந்தையின் பெயர், பிறந்த தேதி, பாலினம், தாய் மற்றும் தந்தையின் பெயர் ஆகியவற்றை உள்ளீடு செய்யுங்கள்
- இறுதியாக படிவத்தின் கீழே உள்ள கேப்ட்சா குறியீட்டை பதிவு செய்து, சமர்ப்பி என்ற பொத்தானை க்ளிக் செய்தால் பிறப்பு சான்றிதழ் ஆவணம் திரையில் தோன்றும்
- பக்கவாட்டில் உள்ள டவுன்லோட் எனும் ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்கல் மொபைல் போனிலேயே பிறப்புச் சான்றிதழை சேமிக்கலாம்
Frequently Asked Questions
சென்னை மாநகராட்சியில் பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க அவகாசம் எப்போது வரை நீட்டிக்கப்பட்டுள்ளது?
பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரை தாமதமாக சேர்த்தால் கட்டணம் உண்டா?
குழந்தை பிறந்த 12 மாதங்களுக்குள் பெயரை சேர்த்தால் கட்டணம் இல்லை. 12 மாதங்களுக்கு மேல் 15 ஆண்டுகளுக்குள் சேர்த்தால் குறிப்பிட்ட கட்டணம் செலுத்த வேண்டும்.
பிறப்புச் சான்றிதழுக்கு நேரில் விண்ணப்பிக்கும் போது என்ன ஆவணங்கள் தேவை?
பிறப்புச் சான்றிதழின் நகல், பள்ளி/கல்லூரி சான்றிதழ், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டை நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.
பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழை ஆன்லைனில் எவ்வாறு பதிவிறக்கம் செய்வது?
சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் பிறப்பு மற்றும் இறப்பு பிரிவிற்கு சென்று, பதிப்பு சான்றிதழ் தரவிறக்கம் என்பதைத் தேர்ந்தெடுத்து, தேவையான விவரங்களை உள்ளிட்டு பதிவிறக்கம் செய்யலாம்.























