மேலும் அறிய

ஆசை வார்த்தை: இதய நோயாளி பெண்ணிடம் பண மோசடி - சென்னையில் டிரைவர் கைது

சென்னை மதுரவாயல் பகுதியில் பெண்ணிடம் சுமார் ரூ.29 லட்சம் மற்றும் 23  கிராம் தங்க நாணயங்களை  பெற்று மோசடி செய்த கார் ஓட்டுநர் கைது.

ஆசை வார்த்தை - பணம் பறிப்பு

சென்னை வானகரம் போரூர் கார்டன் பகுதியில் திருநாவுக்கரசு ( வயது 62 ) என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஸ்ருதி வர்ஷினி என்பவர் இதய நோய் காரணமாக அவரது கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று தந்தை திருநாவுக்கரசு வீட்டில் வசித்து வந்தார். ஸ்ருதி வர்ஷினி இதய நோய் சிகிச்சைக்காக கடந்த 2022 - ம் ஆண்டு வேலூர் மருத்துவமனைக்கு காரில் சென்ற போது , அறிமுகமான கார் ஓட்டுநர் கார்த்திக் என்பவர் மேற்படி பெண் ஸ்ருதி வர்ஷினியிடம் அனுதாபப்படக் கூடிய வகையில் பேசியும் , ஆசை வார்த்தைகள் கூறியும் பல தவணைகளாக ரொக்கமாகவும் , ஆன்லைன் மூலமாகவும் ரூ.29,58,040/-பணம் மற்றும் 23 கிராம் தங்க நாணங்களை பெற்றுள்ளார்.

வங்கி கணக்கு ஆய்வு

இந்நிலையில் கடந்த 16.05.2025 அன்று ஸ்ருதி வர்ஷினி உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். திருநாவுக்கரசு அவரது மகள் வங்கி கணக்கு பரிவர்த்தனைகளை பார்த்த போது , ஸ்ருதி வர்ஷினியிடம் , கார்த்திக் பணம் மற்றும் தங்க நாணயங்களை பெற்று மோசடி செய்துள்ளது தெரிய வந்தது. இது குறித்து திருநாவுக்கரசு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் T-4 மதுரவாயல் காவல் நிலைய குற்றப் பிரிவில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

T-4 மதுரவாயல் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து வழக்கில் சம்பந்தப்பட்ட பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் , ( வயது 34 ) என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கார்த்திக் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னையில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய பெண்

சென்னை பெருநகர காவல் விபச்சார தடுப்புப் பிரிவு-2 (Immoral Traffic Prevention Unit-2) காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் , தனிப்படையினர் பெருங்குடி , சர்ச் தெருவில் உள்ள ஒரு ஜுஸ் கடையில் சந்தேகத்திற்கிடமாக சில நபர்களிடம் பெண்களை நிறுத்தி பேசிக் கொண்டிருந்த ஒரு பெண்ணை கண்காணித்தபோது , அவர் பெண்களை வைத்து அழைப்பின் பேரில் பாலியல் தொழில் செய்து வருவது உறுதி செய்யப்பட்டது.

அதன் பேரில் , பெண் காவலர்கள் உள்ளிட்ட தனிப்படையினர் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வரும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மாரியம்மாள் ( வயது 32 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு மேற்படி எதிரியின் கண்காணிப்பில் இருந்த 2 பெண்கள் மீட்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட எதிரி மாரியம்மாள் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில்  அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட 2 பெண்கள் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
EPS ADMK: நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
Embed widget