சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 32 வார்டுகள் பட்டியலினத்தோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கான இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பட்டியலின பெண்களுக்கு 16 இடங்களும், பொதுப்பிரிவு பெண்களுக்கு 84 வார்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. 


அந்த 32 வார்டுகளில் 16 வார்டுகள் பட்டியலின பெண்களுக்கும், 16 வார்டுகள் பொதுப்பிரிவு பட்டியலின பெண்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்த 16 ல் போட்டியிடும் ஒரு பட்டியலின பெண்ணே மேயர் ஆவார்.


முன்னதாக, தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் எந்தெந்த சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்ற புதிய உத்தரவை தமிழ்நாடு அரசின் கூடுதல் முதன்மை செயலாளர் ஷிவ்தாஸ்மீனா நேற்று பிறப்பித்தார்.


அதன்படி ஆதிதிராவிட பெண்கள் மட்டுமே போட்டியிடும் வகையில் சென்னை மாநகராட்சியும், தாம்பரம் மாநகராட்சியும் ஒதுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஆவடி மாநகராட்சி ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த ( ஆண்/பெண்) மட்டுமே போட்டியிடும் வகையில் ஒதுக்கப்பட்டது.


கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட கடலூர் மாநகராட்சி, திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்ட திண்டுக்கல் மாநகராட்சி, வேலூர் மாவட்டத்திற்குட்பட்ட வேலூர் மாநகராட்சி, கரூர் மாவட்டத்திற்குட்பட்ட கரூர் மாநகராட்சி, விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட சிவகாசி மாநகராட்சி, காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட காஞ்சிபுரம் மாநகராட்சி, மதுரைக்குட்பட்ட மதுரை மாநகராட்சி, கோயம்புத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட ஈரோடு மாநகராட்சி பொதுப்பிரிவில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது.


தமிழ்நாடு அரசின் இந்த உத்தரவால் சென்னை மற்றும் தாம்பரம் மாநகராட்சி ஆதிதிராவிட பெண் போட்டியாளர்கள் மட்டுமே அனைத்துக்கட்சியிலும் போட்டியிடும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகளில் மீதம் உள்ள மாநகராட்சிகளான திருச்சி, சேலம், திருநெல்வேலி, திருப்பூர், தூத்துக்குடி, ஓசூர், நாகர்கோயில், கும்பகோணம் ஆகிய மாநகராட்சிகளில் வழக்கம்போல போட்டியிடுபவர்களே போட்டியிட உள்ளனர்.


தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்தில் மாநில தேர்தல் ஆணையம் உள்ளது. இந்த நிலையில், நாளை அனைத்துக்கட்சி கூட்டத்தை தேர்தல் ஆணையம் கூட்டியுள்ளது. இந்த கூட்டத்திற்கு பிறகு வரும் 21-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பரவல், ஒமிக்ரான் பரவல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   


 மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண