Breaking News Live: கொரோனா பரிசோதனையை அதிகரிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
சென்னை மாநகராட்சியில் சொத்து வரி மற்றும் தொழில் வரியை செலுத்த மார்ச் 31 கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மோடி குறித்து கடந்த 2018ஆம் ஆண்டு நடிகை குஷ்பூ போட்ட ட்வீட் அவரின் அரசியல் வாழ்க்கைக்கு வினையாக மாறியுள்ளது.
அப்போது, காங்கிரஸ் கட்சியில் இருந்த குஷ்பூ, "எங்கே பார்த்தாலும் மோடி என்ற பெயர்தான் வைத்திருக்கிறார்கள். அந்த பெயரை வைத்துள்ளவர்கள் அனைவரும் ஊழலில் ஈடுபட்டுள்ளார்கள். எனவே, மோடி என்ற பெயருக்கான அர்த்தத்தை ஊழல் என மாற்றிவிடுவோம். காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது, மோடி குறித்து குஷ்பூ வெளியிட்ட ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.
உலகப்புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில், பங்குனி உத்திர விழாவுக்கு சபரிமலை ஐப்பன் கோயில் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மார்ச்,27 ஆம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி ஏப்ரல்,5 ஆம் தேதி வரை பங்குனி உத்திர திருவிழா நடைபெற உள்ளது.
போதைப்பொருள் ஒழிப்பில் அனைவரும் கைகோர்த்திட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
கொரோனா தொற்று சற்று அதிகரிக்கும் நிலையில், பரிசோதனையை அதிகரிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
திருச்சியில் வன்முறையை தூண்டும் வகையிலும், அவதூறாகவும், பேசியதாக சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரயில்வே பணி நியமன ஊழல் தொடர்பாக, சிபிஐ சம்மன் அனுப்பியிருந்த நிலையில், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி நேரில் ஆஜரானார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வெள்ளாளபுரம் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. அமுதாவை தொடர்ந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேடப்பனும் உயிரிழந்தார்.
கோவை பூச்சியூர் பகுதியில் மின்கம்பம் உடைந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி 30 வயதான ஆண் யானை உயிரிழந்தது. ஊருக்குள் வந்த யானை காட்டுக்குள் விரட்ட முயன்றபோது விபத்து நேர்ந்ததாக தகவல்
Background
சென்னை மாநகராட்சியில் சொத்து வரி மற்றும் தொழில் வரியை செலுத்த மார்ச் 31 கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி எச்சரிக்கை:
”மார்ச் 31ம் தேதி அன்று கால அவகாசம் முடிவதற்குள் நிலுவையில் உள்ள சொத்து மற்றும் தொழில் வரியை செலுத்தாவிட்டால் 2 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் எனவும், நீண்ட காலமாக வரி செலுத்தாதவர்களின் சொத்துகள் சீல் வைக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூபாய் 1,390 கோடி சொத்து வரியாகவும், ரூபாய் 412 கோடி தொழில் வரியாகவும் சென்னை மாநகராட்சியால் வசூலிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சொத்து வரி விவரம்:
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாநகராட்சியில் நிர்வாக ரீதியாக 15 மண்டலங்களும், 200 வார்டுகளும் உள்ளன. இங்கு மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளுக்கான நிதி ஆதாரமாக பொதுமக்களிடமிருந்து சொத்து மற்றும் தொழில் வரி வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டு வரும் மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைவதால் அதற்குள், நிலுவையில் உள்ள வரிகளை செலுத்துமாறு மாநகராட்சி நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
அபராதம் இல்லை:
சென்னையில் உள்ள 13.31 லட்சம் சொத்து உரிமையாளர்களிடமிருந்து அந்தந்த நிதியாண்டின் முதல் பாதிக்கான வரி ஏப்ரல் 15க்குள்ளும், இரண்டாம் பாதிக்கான வரி அக்டோபர் 15க்குள்ளும் முழுமையாக வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வரி செலுத்தாதவர் மீது பெருநகர சென்னை மாநகராட்சி சட்ட பிரிவின்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வசிக்கும் கட்டடத்தின் குடியிருப்புத் தன்மை மற்றும் உபயோகத் தன்மை ஆகியவற்றில் ஏதேனும் மாற்றம் செய்தால், சென்னை மாநகராட்சி நிர்வாகத்திற்கு 15 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.
இதனிடையே, சொத்து வரியை சரியாக செலுத்துவோரை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் வரியை செலுத்துவோருக்கு, ஐந்து சதவீதம் அல்லது ரூபாய் 5,000 வரை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அதேநேரம், கால அவகாசம் முடிந்த பின் சொத்து வரி செலுத்துவோருக்கு, இரண்டு சதவீத அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த நிதியாண்டில் சொத்து வரி உயர்த்தப்பட்டதால், அபராதம் இன்றி சொத்து வரி செலுத்துவதற்கு, ஜனவரி 12 வரை மாநகராட்சி அவகாசம் அளித்தது. ஆனாலும், பெரும்பாலான சொத்து உரிமையாளர்கள், மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
வரி செலுத்தாத 5 லட்சம் பேர்:
சென்னையில் உள்ள 13.31 லட்சம் சொத்து உரிமையாளர்களில் சுமார் 8.3 லட்சம் பேரிடமிருந்து இதுவரை, 1400 கோடி ரூபாய் வரி வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் 5 லட்சம் பேர் வரியை செலுத்தவில்லை. அவர்களிடமிருந்து மார்ச் 31ம் தேதிக்குள் வரியை வசூலிப்பதோடு, தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி வசூலில் சென்னை முதலிடம் பிடிக்க வேண்டும் எனும் நோக்கிலும் மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. இதற்காக, தற்போது நாள் ஒன்றிற்கு ஒரு வார்டில் 100 பில் எனும் இலக்குடன் வரி வசூலிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -