சென்னை புறநகர் பகுதியில் மிக முக்கிய பொதுமக்கள் பயன்படுத்தும் பொது போக்குவரத்தாக, மின்சார ரயில் போக்குவரத்து இருந்து வருகிறது. குறிப்பாக சென்னை புறநகர் பகுதிகளாக இருக்கும் காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு சென்னையின் புறநகர் பகுதிகளை, இணைக்கும் போக்குவரத்தாக சென்னை கடற்கரை மின்சார ரயில் போக்குவரத்து இருந்து வருகிறது. நாள்தோறும் சென்னை கடற்கரையில் இருந்து ஏராளமான ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை கடற்கரையில் இருந்து , தாம்பரம் ரயில் நிலையம் , செங்கல்பட்டு ரயில் நிலையம், காஞ்சிபுரம் ரயில் நிலையம் ,திருமால்பூர் ரயில் நிலையம் ஆகிய வழித்தடங்களுக்கு நாள் ஒன்றுக்கு 80-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. நாள்தோறும் இதன் மூலம் ஆயிரக்கணக்கான பயணிகள் மற்றும் சென்னையில் பணிபுரி ஊழியர்கள் இதன் மூலம் பயன்படுகின்றனர். இந்நிலையில் மின்சார தொடர்வண்டியில் சிக்கி கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை புறநகர் பகுதியான வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு நண்பர்களுடன், கல்லூரி மாணவிகள் சென்று விட்டு வீடு திரும்பும் போது சோனியா வயது (18) என்கிற மாணவி வண்டலூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்கும் போது சென்னை - எழும்பூரில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற விரைவு ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மாணவி சோனியா உடன் வந்த நண்பர்கள், ரயில் நடைமேடையை அடைவதற்கு முன்பாகவே நின்று கொண்டிருந்தபொழுது இறங்கியுள்ளனர். மாணவி குள்ளமாக இருந்த காரணத்தினால், ரயிலில் இருந்து இறங்க முடியாமல் முடியாமல் குதித்த பொழுது விரைவு வண்டியில், சிக்கி உயிரிழந்ததாக தெரிகிறது.
மாணவி விரைவு ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் குறித்து, தகவல் அறிந்து வந்த தாம்பரம் இருப்பு பாதை ரயில்வே காவல்துறையினர் உயிரிழந்த மாணவி சோனியாவின், பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களுடன் ஆனந்தமாக இருந்துவிட்டு வீடு திரும்பும்போது நடந்த இருபால் சக நண்பர்களிடையே இந்த சம்பவம் சோகத்தில் மூழ்கியது. சந்தோஷமாக நண்பர்களுடன் வெளிவந்த மாணவியின், சிறிய தவறால் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்