காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை ( kancheepuram rain )
சென்னை வானிலை மையம் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என அறிவித்துள்ள நிலையில் காஞ்சிபுரம் பகுதியில் காலை முதலே மழை பெய்ய தொடங்கி உள்ளது. காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, ஒலி முகமது பேட்டை,பாலு செட்டி சத்திரம், தாமல், வாலாஜாபாத், பரந்தூர், மாகறல், ஆர்ப்பாக்கம், உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. காலையிலேயே மழை பெய்ய தொடங்கி உள்ளதால் பல்வேறு பணிக்கு செல்பவர்களும், கல்லூரிக்குச் செல்லும் மாணவ மாணவிகளும் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு பகுதிகளிலும் கனமழை ( chengalpattu rain )
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் விட்டு விட்டு தூரல் பெய்து வருகிறது. செங்கல்பட்டு அடுத்துள்ள மதுராந்தகம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்து வருவதால் காலையில் வேலைக்கு செல்பவர்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.
மதுராந்தகம், அச்சரப்பாக்கம், கருங்குழி ,சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை, மொறப்பாக்கம், பெரும்பாக்கம், எண்டத்தூர், தண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதலில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வந்த நிலையில் காலை முதல் கன மழை பெய்து வருகிறது
சென்னை புறநகர் பகுதிகளிலும் மழை ( chennai rain )
சென்னையின் புறநகர் பகுதிகளாக இருக்கக்கூடிய தாம்பரம், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், மறைமலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் விட்டு விட்டு தூரலும் பெய்து வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். அதேநேரம், பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், இரவு நேரத்தில் பெய்த இந்த மழை குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தியுள்ளதது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
3 மணி நேரத்திற்கு மழை தொடரும்:
இதனிடையே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, கும்மிடிப்பூண்டி, திருக்கழுகுன்றம், திருப்போரூர், உத்திரமேரூர்,செய்யூர், மதுராந்தகம், சோளிங்கர், திருத்தணி, நெமிலி, தாம்பரம், வண்டலூர் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் மழை தொடரும் என மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.