சென்னை பெசன்ட் நகர்.. கோலாகலமாக கொண்டாடப்பட்ட சுதந்திர தினம்! பீச் பாய்ஸ் சார்பில் கொடியேற்றம்

சென்னை பெசன்ட் நகர் எலைட் கடற்கரையில், பீச் பாய்ஸ் வால்க்கர்ஸ் சார்பாக இன்று தேசிய கொடி ஏற்றப்பட்டது. சிறப்பு விருந்தினராக பாலசுந்தரம் கலந்து கொண்டு கொடியை ஏற்றி வைத்தார்

Continues below advertisement

சுதந்திர தினமான இன்று சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவல் துறையின் பல்வேறு பிரிவினர் அளிக்கும் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்ட பின் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.

இதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்கள், அரசு அலுவலகங்களிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. தமிழகம் முழுவதும் பல இடங்களில் இன்று தேசிய கொடி ஏற்றப்பட்டிருக்கிறது. சென்னை பெசன்ட் நகரில், எலைட் கடற்கரையில் 'Beach boys walkers' சார்பாக இன்று தேசிய கொடி ஏற்றப்பட்டது. சிறப்பு விருந்தினராக பாலசுந்தரம் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

Continues below advertisement



இந்த ஆண்டு விழாவில் அடையார் ஆனந்தபவன் நிர்வாக இயக்குநர் கே.டி.வெங்கடேசன், பீச் பாய்ஸ் அட்மின் மோகன் ராகவன், முன்னாள் அட்மின் ஏழுமலை, Media95 சிஇஓ பழனி ராஜா, மற்றும் பீச் பாய்ஸ் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.



கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று சென்னை பெசன்ட் நகர் எலைட் கடற்கரையில் பீச் பாய்ஸ் வால்க்கர்ஸ் சார்பாக தேசிய கொடி ஏற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement
Sponsored Links by Taboola