பரபரப்பான பிராட்வே பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு நவீன வசதிகளுடன் ஒருங்கிணைந்த முனையமாக மாற்றப்பட உள்ளது. இதற்காக கிளைவ் பேக்டரி அருகே தற்காலிமாக பேருந்து நிலையமானது அமைக்கப்பட்டுள்ளது
பிராட்வே பேருந்து நிலையம்:
சென்னையின் பழமையான பிராட்வே பேருந்து நிலையம் ஆரம்பத்தில் புறநகர் மற்றும் வெளியூர் பேருந்துகள் செல்லும் பேருந்து நிலையமாக இருந்து வந்தது. அதன் பிறகு பேருந்து நிலையமானது கோயம்பேட்டிற்கு மாற்றப்பட்டது. அதன் இந்த பிராட்வே பேருந்து நிலையம் மாநகர பேருந்துகள் வந்து செல்ல பயன்படுத்தப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் 500 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் மிக பழைய பேருந்து நிலையமாக உள்ள இந்த பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதியின்றி காணப்படுகிறது.
ஒருங்கிணைந்த பேருந்து முனையம்:
தற்போது இந்த பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு நவீன வசதிகளுடன் 10 மாடி ஒருங்கிணைந்த பேருந்து முனையமாக மாற்றப்பட உள்ளது. குறளகம் கட்டிடத்திற்கு பின்னால் அமையயுள்ள் இந்த பேருந்து முனையத்திலிருந்து கோட்டை மின்சார ரயில் நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையத்துடன் இணைக்கும் வகையில் சுமார் 650 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ள்து.
தற்காலிமாக பேருந்து நிலையம்:
பிராட்வே பேருந்து நிலையம் இடிக்கப்பட உள்ள நிலையில் தற்காலிமாக சென்னை துறைமுகத்திக்கு சொந்தமான இடத்தில் தற்காலிக பேருந்து நிலையமானது அமைக்கப்பட்டு வருகிறது. இங்கிருந்து பேருந்துகளை இயக்குவதற்க்கும், பயணிகள் நிழற்குடை, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள் உள்பட அங்கு முழுவீச்சில் நடைப்பெற்று வருகிறது. அந்த இடத்துக்கு ஆண்டுக்கு 3.86 கோடி வாடகையாக சென்னை துறைமுகம் நிர்ணயித்துள்ளது.
அதிகாரிகள் ஆய்வு:
இந்த தற்காலிக பேருந்து நிலையத்துக்கான வேலைகள் சென்னை மாநகர போக்குவரத்து மேலாண் இயக்குனர், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
மேலும் இந்த தற்காலிக பேருந்து நிலையமானது விரைவில் திறக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.