ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு, போக்குவரத்து மாற்றத்திற்கான அறிவிப்பு குறித்து தாம்பரம் காவல்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

ஆயுதபூஜை விடுமுறை

ஆயதபூஜை விடுமுறையையொட்டி, கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT), நோக்கிச் செல்லும் வாகனங்களின் நெரிசலைத் தவிர்க்க, 30.09.2025 அன்று, பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன.

ஆயுதபூஜை விடுமுறை பயணத்தின்போது, பொதுமக்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக, தாம்பரம் மாநகர காவல்துறை. பெருநகர சென்னை காவல் மற்றும் ஆவடி காவல் ஆணையரகத்துடன் இணைந்து முக்கிய ஏற்பாட்டைச் செய்துள்ளது. அதன்படி, கனரக வாகனங்கள் 30.09.2025 அன்று, மதுரவாயல் மற்றும் பூந்தமல்லி சந்திப்புகளில் இருந்து எல்லை மாவட்டங்கள் நோக்கிச் செல்லுமாறு வழித்தடம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

தாம்பரம் நகர காவல்துறை, பொதுமக்கள் வசதிக்காகவும், போக்குவரத்து நெரிசலைத் தணிக்கவும், ஜி.எஸ்.டி சாலை, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், ஈ.சி.ஆர், ஓ.எம்.ஆர் மற்றும் பிற முக்கிய சாலைகளில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை 30.09.2025 அன்று செய்துள்ளது.

கனரக வாகனங்களுக்கான மாற்றுப் பாதை விவரம்

புறப்படும் இடம்

30.09.2025 - சென்னை மற்றும் ஆவடி பகுதிகளிலிருந்து வரும் கனரக வாகனங்கள்.

மாற்றுப் பாதை விவரம்

பூந்தமல்லியிலிருந்து திருப்பிவிடப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் - காஞ்சிபுரம்- திருவண்ணாமலை திருக்கோவிலூர் வழியாக GST சாலையை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

புறப்படும் இடம்

மதுரவாயல் பகுதியிலிருந்து தாம்பரம். GST நோக்கி வரும் கனரக வாகனங்கள்.

மாற்றுப் பாதை விவரம்

மதுரவாயலில் திருப்பிவிடப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் காஞ்சிபுரம் திருவண்ணாமலை-திருக்கோவிலூர் வழியாக GST சாலையை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

புறப்படும் இடம்

காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத் வழியாக ஓட்டேரி நோக்கி வரும் கனரக வாகனங்கள்.

மாற்றுப் பாதை விவரம்

ஓரகடம் சந்திப்பில் திருப்பிவிடப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் -திருவண்ணாமலை-திருக்கோவிலூர் வழியாக GST சாலையை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

05.10.2025 பிற்பகல் 02.00 மணி முதல், 06.10.2025 04.00 மணி வரை

புறப்படும் இடம்

செங்கல்பட்டு வழியாக வரும் கனரக வாகனங்கள்,

மாற்றுப் பாதை விவரம்

செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலை வாலாஜாபாத் -காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் வழியாக பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மூலம் சென்னை வந்தடையலாம்.

புறப்படும் இடம்

சிங்கப்பெருமாள் கோவில் வழியாக வரும் கனரக வாகனங்கள்.

மாற்றுப் பாதை விவரம்

ஓரகடம் ஸ்ரீபெரும்புதூர் வழியாகத் திருப்பிவிடப்பட்டு பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மூலம் சென்னை வந்தடையலாம்.

மாற்று வழி 

இரும்புலியூர் பாலத்தின் அருகில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால், உடனடியாக சுனரக வாகனங்கள், வண்டலூர் வெளிவட்டச் சாலை வழியாகத் திருப்பிவிடப்படும்.

பயணிகளுக்கான முக்கிய வசதிகளும், ஆலோசனைகளும்.

GST சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க.

புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், சீர்காழி, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள், நெரிசலற்ற பயணத்திற்காக OMR மற்றும் ECR வழித்தடங்களைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இரயில் போக்குவரத்து ஏற்பாடுகள்.

சாலை நெரிசலைத் தவிர்க்க, சிறப்பு உள்ளூர் ரயில்கள் வழக்கமான இடைவெளியில் இயக்கப்படும். பயணிகள் இவற்றை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பேருந்து ஏற்பாடுகள்.

பயணிகளின் வசதிக்காக, கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து (2,430) சிறப்புப் பேருந்துகள் (26.09.2025 முதல் 30.09.2025 வரை இயக்கப்பட்டு வருகிறது.

எனவே, சீரான போக்குவரத்திற்காக, வாகன ஓட்டிகள் தாம்பரம் மாநகர போக்குவரத்துக் காவல்துறையினருடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.