பெண்களுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்துவது போல் தங்கள் ஒரே மகனுக்கு தங்கள் முன்னோர்களின் பாரம்பரிய கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் அழைப்பிதழ் அடித்து வேட்டி அணியும் விழாவினை மாமல்லபுரத்தில் நடத்த ஆயத்தமாகும் ஆந்திர தம்பதியினர்.
ஆந்திரா மாநிலம், ஓங்கேல் மாவட்டத்தில் உள்ள தொட்டவரம் கிராமத்தை சேர்ந்த எஸ்.வெங்கடேஷ்- ஹரிப்பிரியா தம்பதியரின் ஒரே மகன் வி.வெங்கடவினய்( வயது15), இவர் செங்கல்பட்டில் உள்ள ஒரு பள்ளியில் சி.பி.எஸ்.இ. பாட பிரிவில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். எஸ்.வெங்கடேஷ் கடந்த 24 வருடங்களுக்கு முன்பு மாமல்லபுரம் வந்த அவர் அங்குள்ள கோவளம் சாலையில் திருமணம் மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளுக்கு பாத்திரங்கள், அலங்கார மேடை அமைக்கும் சப்ளையர்ஸ் கடை வைத்துள்ளார்.
வேட்டி அணியும் விழா
தமிழகத்தில் எப்படி வயதுக்கு வந்த பெண்களுக்கு மஞ்சள் நீராட்டு விழா (பூப்பனித நீராட்டு விழா) நடத்துகிறார்களோ? அதேபோல் ஆந்திராவில் பெண்களை போல் பருவம் அடைந்ததாக எண்ணி 15 வயதுடைய ஆண் பிள்ளைகளுக்கு அவர்களது பெற்றோர் தங்கள் முன்னோர்கள் பின்பற்றிய பாரம்பரிய கலாச்சாரத்தை பின்பற்றி வேட்டி அணியும் விழா நடத்துவார்கள். விழா அன்று தாய் மாமன் பழம், பாக்கு சீர் வரிசை தட்டுடன் பட்டுவேட்டி எடுத்து கொடுப்பாராம். அதனை பெற்றோர் வாங்கி தங்களது மகனிடம் கொடுப்பார்களாம். சீர் வரிசை தட்டில் உள்ள பட்டுவேட்டி எடுத்துக் கொடுப்பார்.
வேட்டி அணியும் விழா இருக்கா ?
வீடு வீடாக வழங்கி
இதனை அடுத்து அந்த வேட்டியை இளைஞர் அணிந்து கொண்டு வேட்டி அணியும் விழாவில் கலந்துகொண்ட பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்குவார். நிகழ்ச்சிக்கு வரும் ஒவ்வொருவர் காலிலும் விழுந்து, இளைஞர் ஆசிர்வாதம் வழங்கும் வகையில் இந்த விழா நடைபெறுகிறது. ஆந்திராவை சேர்ந்த மகாபலிபுரத்தில் வசிக்கும் தம்பதியினர் தனது மகன் வேட்டி அணி விழாவிற்கு ஆயத்தமாகி வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்த, அழைப்பிதழ்களும் வீடு வீடாக சென்று வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் இந்த வேட்டி அணியும் விழாவிற்கான, அழைப்பிதழ் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
என்னது !! மஞ்சள் நீராட்டு விழா போல.. வேட்டி அணியும் விழா இருக்கா ?
இதுகுறித்து இளைஞரின் தந்தை வெங்கடேஷ் தெரிவித்ததாவது : ”இதுபோன்ற வேட்டி அணியும் விழாவானது, தமிழகத்தில் புதியது. அதனால் தான் வைரலாக பரவி வருகிறது. ஆனால் ஆந்திராவில் பல ஆண்டு காலமாக பாரம்பரியமாக கொண்டாடி வருகிறோம். சிலர் வேட்டியணியும் விழாவை அவரவர் வசதிக்கேற்ப, சிறிய அளவிலும் பெரிய அளவிலும் செய்து வருகின்றனர். அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு வேட்டி அணியையும் விழா, நடத்திக் கொள்வார்கள். எனக்கு தெரிந்தது வரை மகாபலிபுரத்தில் இது போன்று நடைபெற்றது கிடையாது. பலரும் இந்த அழைப்புகளை பார்த்து என்னிடம் ஆர்வமாக கேட்டு வருகின்றனர். ஆனால் பரம்பரை பரம்பரையாக நாங்கள் இதை பாரம்பரியமாக செய்து வருகிறோம். பெண் பிள்ளைகள் என்றால் தாவணி அணியும் விழாவும் செய்வார்கள்” என தெரிவித்தார்