உலக அளவில் முக்கிய நகரங்கள் அசுர வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகின்றன. இதனால் முக்கிய நகரங்கள் எப்போதும் போக்குவரத்து நெரிசலால், சிக்கி தவித்து வருகிறது. போக்குவரத்து நெரிசலில் இருந்து தீர்வு கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மெட்ரோ உள்ளிட்ட போக்குவரத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. இருந்தும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.
போக்குவரத்து நெரிசலில் தலைநகரங்கள்
அந்த வகையில் இந்தியாவைப் பொறுத்தவரை பெங்களூர், மும்பை, டெல்லி மற்றும் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் தலைநகரமாக இருக்கக்கூடிய சென்னை அசுர வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகிறது.
முக்கிய திட்டத்தை கையில் எடுத்த அரசு
இதனால் சென்னை விடுமுறை நாட்கள் மற்றும் சாதாரண நாட்கள் என எப்போதுமே போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவித்து வருகிறது. சென்னை புறநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலால், சிக்கி தவித்து வருவதால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில் நகரத்திற்குள் "ஏர் டாக்சி" கொண்டு வருவதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
"ஏர் டாக்சி" என்றால் என்ன? - Air Taxi
இந்தியாவைப் பொறுத்தவரை இரண்டு நகரங்களுக்கு இடையே விமான சேவை இருந்து வருகிறது. ஒரு சில நகரங்களில் நகரத்திற்குள்ளாக ஒருவர் அல்லது இருவர் பயணிக்க கூடிய சிறிய ரக விமானங்கள், "ஏர் டாக்சி" செயல்பாட்டில் இருந்து வருகிறது. தொடர்ந்து வளர்ந்த நாடுகளில் "ஏர் டாக்சிகளை" அதிகரிக்கும் முயற்சிகளிலும் அதற்கான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுப்போன்ற போக்குவரத்து வசதிகள் பல்வேறு நாடுகளில் இருப்பதால், இந்தியாவிலும் இதை கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
போயிங் நிறுவனத்துடன் கைகோர்க்கும் அரசு
இந்தநிலையில் சென்னையில் இருவர் மட்டும் பயணிக்க கூடிய சிறிய விமான போக்குவரத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால் சிறிய ரக விமானத்தில் நகரத்திற்கு உள்ளாக எளிதாக சென்று வர முடியும். அதேபோன்று அவசர உதவிகள் மற்றும் மருத்துவத்துறைக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான சாத்தியக்கூர்களை குறித்து தமிழ்நாடு அரச ஆராய்ந்து வருகிறது.
இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் பாதுகாப்பு வசதிகள் குறித்தும் வழிகாட்டு நெறிமுறைகளை 'போயிங்' நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) மேற்கொள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.