சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் செல்போன் மற்றும் பேஜர் (pager) கருவிகளின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வைக்கப்பட்ட அறிவிப்பு பலகை புகைப்படம் ஒன்று டிவிட்டரில் டிரெண்டாகியது. பயன்பாட்டில் இல்லாத பேஜர் (pager) கருவியை அதில் குறிப்பிட்டதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களை கேலியுடன் பகிந்து வந்தனர். இதையெடுத்து அறிவிப்பு பலகையை நீதிமன்ற நிர்வாகம் நீக்கியிருக்கியது. 


சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் “Cellular Phone And Pager are Prohibited inside the Court Hall." என்ற அறிவிப்பு பலகையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதற்கு தங்களது கருத்துகளை சமூக வலைதளத்தில் பகிர்ந்துவந்தனர். இதை பலரும் கவனித்திருக்க மாட்டோம். ஆனால், இது இண்டர்நெட் யுகம்ல. யாரோ ஒருவர் கவனித்துவிட்டு, சமூக வலைதளங்களில் பகிர்ந்திருப்பார். இண்டர்நெட்டில் மின்னலைவிட தகவல்கள் பரவிடுமே. இந்நிலையில், பல்வேறு தரப்பினர் பேஜர் குறித்து பேசத் தொடங்கினர். டிவிட்டரில் டிரெண்டானது, நீதிமன்ற நிர்வாகம் அறிவிப்பு பலகையை நீக்கியது. 


பேஜர் (Pager):


90-களில் பிறந்தவர்களுக்கு நிச்சயம் பேஜர் என்ற தொலைத்தொடர்பு கருவி பற்றி தெரிந்திருக்கும். பேஜரில் மெசேஜ் வந்தால் அதில் வரும் ஒலி குறித்தும் தெரிந்திருக்கும். சிறிய கால்குலேட்டர் வடிவில் இருக்கும்; ரேடியோ அதிர்வலைகள் மூலம் இயங்கும் ஒரு கருவி. இதன் வருகை கடிதங்களை எழுதுவதை சற்று குறைத்தது என்றுதான் சொல்ல வேண்டும். உலக அளவில் இந்த பேஜரின் சேவை நிறுத்தப்பட்டுவிட்டது. ஆனாலும், ஜப்பானில் மட்டும் சிலர் பேஜரைப் பயன்படுத்தி வந்தனர். பின்னர், அதுவும் நின்றுபோனது. 




1950-60-களில் பேஜர் கருவி உருவாக்கப்பட்டது, 1980-களில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் பிரபலமானது. மொபைல் போன்கள் போல எங்கும் எடுத்து செல்ல வசதியாக இருந்தது. அன்றைய காலத்தில் மெசேஜிங்கிற்கு வசதியாக இருந்தது பேஜர்தான்.  90 களில் உலகம் முழுவதும் ஏராளமான பயனாளர்களை கொண்டிருந்தது. 




ஜப்பானை சேர்ந்த டோக்கியோ டெலி மெசேஜ் நிறுவனம் தயாரித்த பேஜர்களுக்கு 1996 ஆம் ஆண்டு, 1.2 மில்லியன் வாடிக்கையாளர்கள் / பயனர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பேஜரைப் பற்றி நினைத்தால் வியப்பாகத்தான் இருக்கும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண