ஆள் கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி இன்று பிற்பகல் ஆஜரான நிலையில் ஆள் கடத்தலுக்கு உதவியதாக ஏடிஜிபி ஜெயராமன் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
காதல் விவகாரம்:
திருவள்ளூர் மாவட்டம் நான் காடு பகுதியில் வசித்து வருபவர் தனுஷ். இவருக்கும் தேனி மாவட்டத்தை சேர்ந்த விஜயா ஸ்ரீ என்ற பெண்ணுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இருவரும் போனில் பேசி வந்துள்ளன. ஒரு கட்டத்தில் இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய உள்ளது. இதனை அறிந்த விஜயா ஸ்ரீயின் பெற்றோர் அவருக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.
சிறுவன் கடத்தல்
இதனைத் தொடர்ந்து விஜயா ஸ்ரீ வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இதுகுறித்து விஜயா ஸ்ரீயின் பெற்றோர் உறவினர்களிடம் விசாரித்த பொழுது தனுஷ் உடன் விஜயா ஸ்ரீ கடந்த மே மாதம் 15ஆம் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டு தலைமறைவாகிய உள்ளது தெரியவந்தது. இதனை அடுத்து திருவாலங்காட்டில் உள்ள களப்பாக்கத்தில் தனுஷின் வீட்டிற்கு சென்ற விஜயஸ்ரீயின் உறவினர்கள் தனுஷின் தம்பி இந்திரஜுத் என்பவரை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தனுஷின் தாய் காவல்துறை கட்டுப்பாட்டு அறிக்கை தகவல் கொடுத்துள்ளார்..
போலீஸ் விசாரணை
இது தொடர்பாக திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு விஜயாஸ்ரீ என் தாய் வனராஜா உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்தக் கடத்தல் சம்பவத்திற்கு புரட்சி பாரதம் கட்சியை தலைவரும், எம்எல்ஏவமான பூவை ஜெகன்மூர்த்தி ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து காவல்துறையினர் பூவை ஜெகன்மோர்த்தியிடம் விசாரிக்க அவரது வீட்டிற்கு நேற்று சென்றனர்.
பூவை ஜெகன்மூர்த்திகு தொடர்பு
மேலும் இந்த காதல் விவகாரத்தில் பூவை ஜெகன் மூர்த்தி தலைமறைவாகி விட்டதாக தகவல் வெளியான நிலையில் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே தனுஷ் தம்பி கடத்தப்பட்ட நிலையில் இந்திரஜித் தாய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பூவை ஜெகன்மூர்த்திக்கும், இந்த கடத்தில் சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி உள்ளார்.
ADGP ஆஜர்:
இந்த நிலையில் இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பூவை ஜெகன் மூர்த்தி தலைமையில் முன் ஜாமீன் கூறி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன் இன்று விசாரணைககு வந்தது. .இந்த சூழலில் இன்று பிற்பகல் 2:30 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஏடிஜிபி ஜெயராமனும் ஆஜராக வேண்டும் என செயல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதி சரமாரி கேள்வி:
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பூவை ஜெகன்மூர்த்தியிடம் சரமாரி கேள்விகளை கேட்டார்,மக்கள் எதற்காக ஓட்டு போட்டார்கள் என்பதை மறந்து கட்டப் பஞ்சாயத்து செய்யலாமா?விசாரிக்க வந்த போலீசாரை உங்கள் கட்சிக்காரர்கள் தடுப்பது ஏன்?ROLE MODEL ஆக இருக்க வேண்டிய நீங்கள், ஏன் கட்டப் பஞ்சாயத்து செய்தீர்கள்? . விசாரணைக்கு ஒத்துழையுங்கள்.நீதிமன்றம் நினைத்தால் 10 நிமிடத்தில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருக்க முடியும் என்று நீதிபதி அடுக்கான கேள்விகளை வைத்தார்.
ADGP ஜெயராமன் கைது:
கடத்தல் வழக்கில் ADGP ஜெயராமனை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இவ்வழக்கில் அவருக்கு தொடர்புள்ளதாக போலீஸ் கூறியதை அடுத்து, விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்ட கோர்ட், ADGP மீது வழக்குப் பதிவு செய்யாததை நீதிபதி வேல்முருகன் கடுமையாக சாடினார்.சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து ஏடிஜிபி ஜெயராமனை போலீசார் கைது செய்தனர். உயர்நீதிமன்ற வளாகத்தில் ADGP கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்ப்படுத்தியது.