சென்னை விமான நிலையத்தில் சூடான் நாட்டை சேர்ந்த பயணி ஒருவரிடம் இருந்து ரூ.82.41 லட்சம் மதிப்புள்ள 1.85 கிலோ கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது
தமிழ்நாட்டின் முக்கிய விமான நிலையமாக கருதப்படுவது சென்னை விமான நிலையம். உள்ளூர் மற்றும் பன்னாட்டு விமானங்கள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருபவர்கள் தங்கம் கடத்தி வருவது தொடர்கதையாகவே இருக்கிறது. இதனை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் சூழலில் கடந்த வியாழக்கிழமை சார்ஜாவில் இருந்து வரும் சூடான் நாட்டை சேர்ந்த பயணி ஒருவர் தங்கத்தை கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த நபரை அடையாளம் கண்ட விமான நிலைய சுங்கத்துறைனர் சோதனை செய்தனர் . அப்போது அந்த நபரிடம் நூதன முறையில் பசை வடிவிலான தங்கமும், தங்கக் கட்டியும் இருப்பது தெரியவந்தது. தங்கத்தை கடத்தி வந்த அந்த நபரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரிடம் இருந்து 1.85 கிலோ கிராம் எடை கொண்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.82.41 லட்சம் என சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் திரு எம் மேத்யூ ஜாலி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்