மாமல்லபுரம் புராதன சின்னங்களை இலவசமாக சுற்றிப் பார்க்கலாம்! சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி ! காரணம் என்ன ?
"மாமல்லபுரத்தில் இன்று கட்டணம் இன்றி இலவசமாக சுற்றிப் பார்க்கலாம், என தொல்லியல் துறை அறிவித்துள்ளது"

"மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் இன்று கட்டணமின்றி இலவசமாக சுற்றிப்பார்க்கலாம் என்று தொல்லியல்துறை தெரிவித்துள்ளது"
சர்வதேச யோகா தினம்
ஒரு மனிதனுக்கு மன நிம்மதி மற்றும் உடல் ஆரோக்கியம் வேண்டுமென்றால், தினமும் யோகா செய்ய வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் யோகாவின் பலன்களை உலகெங்கிலும் கொண்டு செல்லும் நோக்கில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. யோகா என்பது வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல, அது உடல், மனம் மற்றும் ஆன்மாவை ஒன்றிணைக்கும் ஒரு முழுமையான வாழ்க்கை முறையாக பார்க்கப்படுகிறது.
யோகாசனம், பிராணாயாமம் மற்றும் தியானம் போன்ற பயிற்சிகள் மன அழுத்தத்தைக் குறைக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மன அமைதியை அடையவும் உதவுகின்றன. சர்வதேச யோகா தினம், யோகாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அதனை நமது அன்றாடப் பழக்கமாக்க பார்க்கப்படுகிறது. சர்வதேச யோகா தினத்தை மக்களிடம் கொண்டு செல்வதற்காக, மத்திய அரசு பல்வேறு பிரச்சார யுக்திகளை மேற்கொண்டு வருகிறது.
மாமல்லபுரம் கடற்கரை கோயில்
சென்னை அடுத்த செங்கல்பட்டு மாவட்டத்தில் மாமல்லபுரம் கடற்கரை கோயில், அமைந்துள்ளது. பல்லவர்கள் காலத்தை சார்ந்த குடவரைக் கோயில்கள், உலக பிரசித்தி பெற்ற தொல்லியல் இடமாக இருந்து வருகிறது. நாள்தோறும் பல ஆயிரம் கணக்கான சுற்றுலாப் பயணிகள் மாமல்லபுரம் வருவது, தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
குறிப்பாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்திற்கு படையெடுத்து வருகின்றனர். மாமல்லபுரம் புராதன சின்னங்களான கடற்கரை கோவில், அர்ச்சுனன்தபசு, வெண்ணெய் உருண்டை பாறை, ஐந்துரதம் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் உள்ளன.
இலவச அனுமதி
இந்த புராதன சின்னங்கள் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இந்நிலையில், சர்வதேச யோகா தினம் இன்று (ஜுன் 21) கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் நாளை கட்டணமின்றி இலவசமாக சுற்றிப்பார்க்கலாம் என்று தொல்லியல்துறை தெரிவித்துள்ளது.
அனுமதி கட்டணம் எவ்வளவு ?
மாமல்லபுரம் கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைகல் மற்றும் குடவரை கோவில் பகுதிகளை அருகில் சென்று பார்த்து ரசிக்க, மத்திய தொல்லியல் துறை உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ரூ.40, வெளிநாட்டு பயணிகளுக்கு ரூ.600 கட்டணம் வசூலிக்கிறது. ஒரு இடத்தில் நுழைவுச்சீட்டு பெற்று அனைத்து பகுதிகளையும் பார்வையிடலாம். ஆனால் இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, பொதுமக்கள் மாமல்லபுரம் சுற்றுலா தளத்தை இலவசமாக பார்வையிடலாம்.





















