மாமல்லபுரம் சுற்றுலாத்துறை சார்பில் தமிழ்நாடு அரசால் வருடந்தோறும் டிசம்பர் மாதம் நடத்தப்படும் இந்திய நாட்டிய விழா  துவங்கியது

மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் ( mamallapuram temple )

சுற்றுலாத் துறையில் புகழ்பெற்று விளங்கக் கூடியது செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் இங்கு பல்லவர் கால கற்சிலைகள் ஆன கடற்கரை கோயில், கலங்கரை விளக்கம், அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம், வெண்ணை உருண்டை பாறை, புலி குகை, ஆகிய புராணங்கள் சின்னங்களை காண உள்நாடு மற்றும் வெளிநாட்டினர் தினந்தோறும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து கண்டு களிப்பது வழக்கம் .

மாமல்லபுரம் சுற்றுலாத்துறை சார்பில் தமிழ்நாடு அரசால் வருடந்தோறும் டிசம்பர் மாதம் நடத்தப்படும் இந்திய நாட்டிய விழா துவங்கியது

மாமல்லபுரம் நாட்டிய விழா  ( mamallapuram dance festival 2024 )

அதனை கவரும் வகையில் வருடம் தோறும் டிசம்பர் மாதம் இறுதியில் மாமல்லபுரம் சுற்றுலாத்துறை சார்பில் தமிழ்நாடு அரசால் நடத்தப்படும். இந்திய நாட்டிய விழா நடைபெறுவது வழக்கம் இந்தாண்டு  கடற்கரை கோயில் வளாகம் அருகில் கோலாகலமாக நேற்று இந்திய நாட்டிய துவங்கியது.

மாமல்லபுரம் சுற்றுலாத்துறை சார்பில் தமிழ்நாடு அரசால் வருடந்தோறும் டிசம்பர் மாதம் நடத்தப்படும் இந்திய நாட்டிய விழா துவங்கியது

இவ்விழாவை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக முதன்மை செயலாளர் காகர்லா உஷா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார் . முதலாவதாக மங்கல வாத்திய இசையுடன் துவங்கி இந்த நாட்டிய விழாவில் பெங்களூர் கலம் ஷூ கல்சுரல் டிரஸ்டின் பரதநாட்டியம் மற்றும் மதுரை கோவிந்தராஜ் கலை மேம்பாட்டு நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மாமல்லபுரம் சுற்றுலாத்துறை சார்பில் தமிழ்நாடு அரசால் வருடந்தோறும் டிசம்பர் மாதம் நடத்தப்படும் இந்திய நாட்டிய விழா துவங்கியது

நடன நிகழ்ச்சிகள்

இதை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர் இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து நடனக் கலைஞர்கள் நாள் ஒன்றுக்கு மயிலாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், குச்சிபுடி, பரதநாட்டியம், கதகளி, மோகினி ஆட்டம், ஒடிசி உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகள் நடைபெறுவதாக சுற்றுலாத்துறை சார்பில் தெரிவித்தனர். இந்த நாட்டிய விழா  டிசம்பர் 22-ஆம் தேதி துவங்கி ஜனவரி 21-ஆம் தேதி வரை மாலை 5.30 மணி நேரத்தில் நடைபெறும் என தகவல் தெரிவித்தனர்