போகிப் பண்டிகை

 

பழையன கழிதல், புதியன புகுதல்” என்ற பழமொழிக்கு ஏற்ப, மார்கழி மாதத்தின் கடைசி நாளில் போகிப் பண்டிகை கொண்டாடுவது தமிழர்களின் மரபாக உள்ளது. இதன் மூலம் வீட்டில் உள்ள பழைய பொருட்களை அப்புறப்படுத்துவதோடு, மனதில் உள்ள தேவையற்ற மற்றும் மோசமான எண்ணங்களையும் அந்த தீயில் இட்டு கொளுத்துவதே நோக்கமாகும். அந்த வகையில் இன்று அதிகாலையில் எழுந்து பழைய மற்றும் தேவையற்ற பொருட்களை வீட்டின் முன்பு குவித்து, அவற்றை எரித்து பொதுமக்கள் போகிப் பண்டிகை கொண்டாட்டட்தை தொடங்கியுள்ளனர். அந்த நெருப்புக்கு முன்பு குவிந்த சிறுவர்கள், கைகளில் இருக்கும் இசைக்கருவிகளை வாசித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 



 

கடும் மாசு

 

புகையில்லாமல் போகி பண்டிகையை கொண்டாட வேண்டும் என அரசு பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்துக்கும், இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருந்தும் பொதுமக்கள் அரசின் உத்தரவை மீறி, பல்வேறு பொருட்களை தீயில் ஈட்டு கொளுத்தி போகி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இதன் காரணமாக பனிக்காலத்தில் கடும் மாசு ஏற்பட்டுள்ளது.



விரைவு ரயில்கள் தாமதம்

 

சென்னை புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய செங்கல்பட்டு மாவட்டத்திலும் துணி, பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் எரித்து போகி பண்டிகை கொண்டாடப்பட்டதால், கடும் மாசு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு ,சிங்கப்பெருமாள் கோவில், மறைமலைநகர், கூடுவாஞ்சேரி ,வண்டலூர், ஊரப்பாக்கம், கிளம்பாக்கம், படாளம், மதுராந்தகம், செய்யூர், மேல்மருவத்தூர் ,கல்பாக்கம், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம், சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில்  காற்று மாசு ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு, மெதுவாக வாகனத்தை இயக்கி வருகின்றனர்.

 



இந்தநிலையில் கடும் மாசு காரணமாக , தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி இயக்கக்கூடிய விரைவு ரயில்கள் சிக்னல் சரியாக தெரியாததனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தாமதமாக சென்று கொண்டிருக்கிறது. புகை மற்றும் பனிமூட்டத்தால் சிக்னல் போடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் விரைவு ரயில்கள் தாமதம் ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

போகி பண்டிகை ஒட்டி கடும் பனிமூட்டம் காரணமாக திடீரென ஊட்டியாக மாறிய காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதி.

 


காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று அதிகாலையில் போகி பண்டிகையை ஒட்டி வீட்டிலிருந்து பழைய பொருட்களை வீட்டில் வாசலில் வைத்து எரித்து காற்று மாசு ஏற்பட்டதன் காரணமாக  காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காற்று மாசு மாசுடன் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளது.



காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான செவிலிமேடு, ஓரிக்கை, குருவிமலை, நத்தப்பேட்டை, வையாவூர், ஏனாத்தூர், ராஜகுளம், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, பரந்தூர்,கீழம்பி, தாமல்,ஒலி முகமது பேட்டை, வாலாஜாபாத், மாகரல், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.  கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு திடீரென ஊட்டியை போன்று காஞ்சிபுரம் மாறியதால்  பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து காற்று மாசூடன் கொண்ட பனிப்பொழிவை ரசித்துச் சென்றனர்.