“இந்தி படித்தவன் எல்லாம் எங்க வீட்ல மாடு மேய்க்கிறான்” - அமைச்சர் அன்பரசன் சர்ச்சை பேச்சு

.இந்தி படித்தவர்கள் தனது வீட்டில் மாடு மேய்ப்பதாக அமைச்சர் அன்பரசன் பேசிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Continues below advertisement

"இந்தி படித்தவன் எல்லாம் எங்க இருக்கான் தெரியுமா? எங்க வீட்ல மாடு மேய்க்கிறான்! விளையாட்டுக்கு சொல்லவில்லை உண்மையிலே மாடுதான் மேய்கிறான்” என கூடுவாஞ்சேரியில் அமைச்சர் அன்பரசன் பேசினார்.

Continues below advertisement

கூடுவாஞ்சேரி திமுக பொதுக்கூட்டம்

தமிழக முதல்வர் ஸ்டாலின் 72 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில், பொதுக் கூட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியில் பொது கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .

இதில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் அமைச்சர் தா.மோ.அன்பரசன், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். 

சர்ச்சைக்குரிய பேச்சு என்ன ?

அப்பொழுது பேசிய அமைச்சர் அன்பரசன், சுயமரியாதை திருமணத்தை அதிகாரப்பூர்வமாக செல்லும் என அறிவித்தார். தமிழ், ஆங்கிலம் இரு மொழி கொள்கையை கொண்டு வந்தவர் அண்ணா என்றும் பல்வேறு நாடுகளில் தமிழ் ஆங்கிலப் படித்தவர்கள் பணிபுரிந்து வருவதாக தெரிவித்தார்.

மேலும் இந்தி படித்தவர்கள் எங்க இருக்கான் தெரியுமா எங்க வீட்டில மாடு மேய்க்கிறான் பொய் சொல்லவில்லை, உண்மையிலேயே மாடுதான் மேய்த்துக் கொண்டிருக்கிறான்‌. மேலும் பானி பூரி விற்கவும், ஆச்சாரி மற்றும் கொளுத்து வேலை செய்வதாகவும், நாமளும் இந்தி படித்தால் வட நாட்டிற்குச் சென்று பானி பூரி தான் சுட வேண்டும் தெரிவித்தார். அண்ணா கொண்டு வந்த இரு மொழி கொள்கையை முழுவதும் நிறைவேற்றியதால் நாடு முழுவதும் இருப்பதாகவும் தெரிவித்தார்.

Continues below advertisement