சென்னை: 2026 ஆகஸ்ட் வரை பாமகவின் தலைவராக அன்புமணி ராமதாஸ், பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாம தொடர்வார்கள் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாமக மாநில பொதுக்குழு கூட்டம் !
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் வருகை தந்துள்ளனர். தற்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு தொடங்கியது. மேடையில் பொதுக்குழுவை வைத்து மருத்துவர் ராமதாஸ் வழியில் தமிழகத்தை மீட்போம் என அன்புமணி ராமதாஸ் பேசினர்.
பாமக பொதுக்குழுவில் தீர்மானங்கள்
திமுக அரசை வீழ்த்த தீர்மானம். திமுக ஆட்சியில் வீட்டு வரி, மின்சார கட்டணம் மற்றும் குடிநீர் கட்டணம் உயர்வு. திமுக ஆட்சிக்கு பின்னர் இதுவரை தமிழகத்தில் 7000 படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. தமிழகத்தின் மிக உயர்ந்த கல்வி நிறுவனமான சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடங்கி கிராமங்கள் வரை எங்கும் குழந்தைகள் மாணவிகள் தொடங்கி மூதாட்டிகள் வரை எவருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் நடத்த ஓராண்டு அவகாசம். தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், 2026 ஆகஸ்ட் வரை பதவியில் இருப்பார்கள். பாமகவின் தலைவராக அன்புமணி ராமதாஸ், பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாம தொடர்வார்கள்.
2026 தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக்கு சட்டமன்ற தேர்தல் எதிர் கொள்வதால், தேர்தலை உடனடியாக நடத்துவதற்கான வாய்ப்பு இல்லை. கடந்த காலங்களில் உள்ள உட்கட்சி தேர்தலை தேர்தல் ஆணையத்தின் முன் அனுமதி பெற்று தாமதமாக நடத்தப்பட்ட நிகழ்வுகளில் முன்னுதாரணமாக கொண்டு பாட்டாளி மக்கள் கட்சி உட்கட்சி தேர்தலை நடத்த மேலும் ஓராண்டு காலம் காலக்கேடு வழங்குவது என பாட்டாளி மக்கள் கட்சியை தலைமை பொதுக்குழு கூட்டம் தீர்மானிக்கிறது.
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கவில்லை என்றால், மாபெரும் சிறை நிரப்பு போராட்டம் திமுக அரசை - தீர்மானம் நிறைவேற்றம்.
பொதுக்குழுவுக்கு தடை கோரிய மருத்துவர் ராமதாஸ் தரப்பு
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், கட்சியின் பொதுக்குழுவை இன்று (சனிக்கிழமை) மாமல்லபுரத்தில் கூட்டுவதாக அன்புமணி அறிவித்தார். இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் டாக்டர் ராமதாஸ் தரப்பில், முரளிசங்கர் மனு தாக்கல் செய்தார்.
அதில், பா.ம.க., வின் தலைவராக இருந்த அன்புமணியின் பதவி காலம் கடந்த மே மாதத்துடன் காலாவதியாகி விட்டது. அவருக்கு பொதுக்குழுவை கூட்ட எந்த அதிகாரமும் இல்லை. கட்சியின் நிறுவனத் தலைவரிடம் முறையான அனுமதி பெறாமல் கூட்டப்படும் இந்த பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. டாக்டர் ராமதாசையும், அன்புமணியையும் நேரில் ஆஜர் ஆகா உத்தரவிட்டார், இந்த நிலையில் அன்புமணி நேரில் ஆஜரானார், உடல்நிலை காரணமாக டாக்டர் ராமதாஸ் காணொளி காட்சி முலமாக ஆஜர் ஆனார். தொடர்ந்து விசாரணை நடைபெற்ற நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு அந்த மனுவை தள்ளுபடி செய்தார். இந்த நிலையில் இன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.