Breaking LIVE : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டசபை கூட்டம் தொடக்கம்

Breaking LIVE : நாடு முழுவதும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 14 Oct 2022 06:05 PM
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டசபை கூட்டம் தொடக்கம்

முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

மாணவி சத்யா கொலை வழக்கு : குற்றவாளிக்கு 28-ந் தேதி வரை நீதிமன்ற காவல்

மாணவி சத்யாவை கொலை செய்த வழக்கில் குற்றவாளி சதீஷிற்கு அக்டோபர் 28-ந் தேதி வரை சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

கல்லூரி மாணவி கொலை : நீதிமன்றத்தில் குற்றவாளி மீது தாக்குதல் முயற்சி

மாணவி சத்யாவை கொலை செய்த குற்றவாளி சதீஷ் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர் மீது தாக்குதல் முயற்சி நடந்தது. 

சின்னத்திரை நடிகர் அர்னவ் கைது

சின்னத்திரை நடிகை திவ்யஸ்ரீ அளித்த புகாரின் அடிப்படையில்  சின்னத்திரை நடிகர் அர்னவ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நவம்பர் 12-ந் தேதி இமாச்சல பிரதேசத்திற்கு சட்டசபை தேர்தல்

இமாச்சல பிரதேச மாநிலத்திற்கான சட்டமன்ற தேர்தல் நவம்பர் 12-ந் தேதி நடைபெறும் என்றும், டிசம்பர் 8-ந் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரியில் பட்டாசு வெடிக்க நேரம் அறிவிப்பு 

தமிழகத்தில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க இதே நேரம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் புதுச்சேரி அரசு அறிவிப்பு 


தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 வரையும் இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி : புதுச்சேரி அரசு 

இன்றும் நாளையும் 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 

விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு

உயர் நீதிமன்றத்தில் தீக்குளித்தவர் பழங்குடியினத்தைச் சார்ந்தவர் இல்லை; தமிழக அரசு விளக்கம்

சாதிச் சான்றிதழ் வழங்கப்படாத விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தீக்குளித்தவர் பழங்குடியினத்தைச் சார்ந்தவர் இல்லை என, உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்த வழக்கில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும் இறந்தவர் பழங்குடி இனத்தவரா என விசாரிக்கவும் நீதிமன்றம் உத்தரவு. 

சமரசம் ஏற்பட்டதை அடுத்து வழக்கை  நடிகை சாந்தினி வாபஸ் பெற்றார்

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஏமாற்றியதாக நடிகை புகார். திருமணம் செய்துகொள்வதாகக் கூறி தன்னுடன் சேர்ந்து வாழ்ந்து ஏமாற்றி விட்டதாக காவல் நிலையத்தில் நடிகை புகார் அளித்திருந்தார். நடிகை சாந்தினி புகாரை அடுத்து முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 351 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் 
செய்யப்பட்டது.


நடிகை சாந்தினி தொடர்ந்த வழக்கில் கைதாகி பின்னஎ ஜாமினில் விடுவிக்கப்பட்டார் மணிகண்டன். இருதரப்பினர் இடையே சமரசம் ஏற்பட்டதை அடுத்து வழக்கை 
நடிகை சாந்தினி வாபஸ் பெற்றார்

சென்செக்ஸ் 917 புள்ளிகள் உயர்வு

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 917 புள்ளிகள் உயர்ந்து 58,152 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது .தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 254 புள்ளிகள் உயர்ந்து 17,269 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

இந்தியா - மேலும் 2678 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2678 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது - மத்திய சுகாதாரத்துறை 

குஜராத், இமாச்சல பிரதேச தேர்தல் தேதி இன்று பிற்பகலில் அறிவிப்பு

குஜராத், இமாச்சல பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களின் சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி இன்று பிற்பகலில் தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது.

குஜராத், இமாச்சல பிரதேச தேர்தல் தேதி இன்று அறிவிப்பு 

குஜராத் மற்றும் இமாச்சலப்பிரதேச மாநில தேர்தல் தேதியை இன்று மாலை 3 மணிக்கு டெல்லியில் அறிவிக்கிறது தேர்தல் ஆணையம். குஜராத்தில் உள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகள், இமாச்சலில் உள்ள 68 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது 


 

Background

Petrol, Diesel Price : தலைநகர் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 146வது நாளாக மாற்றமின்றி இன்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. எனினும் கடந்த 100 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதே விலையில் இருந்து வருகிறது.


கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.


இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8உம், டீசல் விலை ரூபாய்க்கு 6உம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது.




இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 146வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (அக்டோபர்.14) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.


தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் விலை உயர்த்தப்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம், தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமில்லாமல் விற்பனையாகி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஓரளவு கவலையின்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


கடந்த மாதத் தொடக்கத்தில், புதிதாக ஆட்சியேற்ற மகாராஷ்டிரா மாநில அரசு பெட்ரோலின் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை (வாட்) ஒரு லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு ஒரு லிட்டருக்கு 3 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததோடு வாக்குறுதியையும் நிறைவேற்றியது.


பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) உள்ளிட்ட பொதுத்துறை ஓஎம்சிகள் சர்வதேச அளவுகோல் விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையில் ஏற்படும் எந்த மாற்றமும் தினமும் காலை 12 மணி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.