Breaking News Tamil LIVE: சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் : பி.வி.சிந்து சாம்பியன்
Breaking News Tamil LIVE Updates: இன்று நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே விரைவுச்செய்திகளாக காணலாம்.
நாட்டின் முன்னணி மல்டிபிளக்ஸ் நிறுவனங்களான பிவிஆர் - ஐநாக்ஸ் நிறுவனங்கள் இணைந்துள்ளன.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு நாடுகளிலிருந்தும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் அரசு முனைப்புடன் உள்ளது என துபாயில் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.
சென்னையில் 2021 ஆகஸ்ட் 19 முதல் 2022 மார்ச் 26 வரை 22, 941 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கத்துக்கு மிரட்டல் வந்ததை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு
தமிழ்நாட்டில் 5 இடங்களில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் சசிகலாவை மீண்டும் சேர்க்க வாய்ப்பில்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூரியுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலினின் துபாய் பயணம் குடும்பச் சுற்றுலா போல் உள்ளதாகவும், தனிப்பட்ட காரணங்களுக்காக புதிய தொழில் தொடங்க துபாய் சென்றுள்ளதாக மக்கள் பேசுவதாகவும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.
மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியர்களின் திறன் உலகின் அனைத்து இடங்களையும் சென்றடைந்துள்ளதாக கூறினார். தமிழ்நாட்டின் வாழைப்பழங்கள் சவுதி அரேபியாவில் கிடைக்கிறது எனவும், ஆந்திராவின் பங்கனப்பள்ளி மாம்பழம், நாகலாந்தின் ராஜா மிளகாய் லண்டனுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றும் கூறினார்.
2 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் அனைத்து நாடுகளுக்கும் விமான சேவை தொடங்கியது. 40 நாடுகளைச் சேர்ந்த 60 விமான நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து விமான சேவை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டன.
இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,421 ஆக குறைந்தது.
நாடு முழுவதும் 16,187 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் இதுவரை 183.20 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரவுடி கவுரி சங்கர் சமயபுரம் அருகே வெங்கங்குடியில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடியில் ஆண் நண்பர்களுடன் பழகியதை கண்டித்த தாயை நண்பர்களுடன் சேர்ந்து மகள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Background
ஆந்திரா: திருப்பதி அருகே பாகார்பேட்டையில் 50 அடி பள்ளத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -