Gujarat, Himachal Pradesh Election Result LIVE: குஜராத் முதல்வராக 12ஆம் தேதி பதவியேற்கும் பூபேந்திர பட்டேல்; இமாச்சலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது..!

Gujarat, Himachal Pradesh Election Results 2022 LIVE: குஜராத் , இமாச்சல் பிரதேச சட்டபேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 08 Dec 2022 02:06 PM
ஆட்சி நமக்குதான்... ஆனால் யார் முதல்வர்..? குழப்பத்தில் இமாச்சல் காங்கிரஸ்..!

இமாச்சலில் 40 இடங்களில் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கவுள்ளது. ஆனால் யார் முதல்வர் என்பதில் இழுபறி ஏற்படும் என்பதால் காங்கிரஸ் தலைமை மற்றும் முன்னிலை வகிக்கும் காங்கிரஸ் வேட்பாளார்கள் தனியார் ரெசார்டில் கூடியுள்ளதாக கூறப்படுகிறது.  

குஜராத்தில் பாஜக வெற்றி; தமிழ்நாட்டில் இனிப்பு கொடுத்து கொண்டாடிய பாஜக..!

குஜராத் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி 7வது  முறையாக ஆட்சி அமைத்தைதை முன்னிட்டு, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி மாநில பொது செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட பாஜகவினர் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் கட்சி நிர்வாகிகளுடன் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடிவருகின்றனர். 

பூபேந்திர பட்டேல் பதவியேற்பில் பிரதமர் பங்கேற்பு..!

12ஆம் தேதி நடக்கவுள்ள பூபேந்திர பட்டேல் பதவியேற்பில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொள்ளவுள்ளனர். 





குஜராத் முதல்வராக பூபேந்திர பட்டேல் பதவியேற்பு..!

குஜராத் முதல்வராக  12ஆம் தேதி  பூபேந்திர பட்டேல் பதவியேற்கவுள்ளார்.

இமாச்சலில் காங்கிரஸ் 40 இடங்களில் முன்னிலை..!

இமாச்சலில் காங்கிரஸ் 40 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 





இமாச்சலில் காங்கிரஸ் 40 இடங்களில் முன்னிலை..!

இமாச்சலில் காங்கிரஸ் 40 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 





இமாச்சலில் காங்கிரஸ் 40 இடங்களில் முன்னிலை..!

இமாச்சலில் காங்கிரஸ் 40 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 





இமாச்சலில் காங்கிரஸ் 40 இடங்களில் முன்னிலை..!

இமாச்சலில் காங்கிரஸ் 40 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 





இமாச்சலில் காங்கிரஸ் 40 இடங்களில் முன்னிலை..!

இமாச்சலில் காங்கிரஸ் 40 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 





இமாச்சலில் ரெசார்ட் அரசியல்; குதிரை பேர பயமா..?

இமாச்சலில் முன்னிலை வகிக்கும்  காங்கிரஸ் வேட்பாளர்களை அக்கட்சித் தலைமை ரெசார்ட்டில் அடைத்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இமாச்சலில் சுயேட்சை வேட்பாளர்கள் மூன்று பேர் முன்னிலை வகித்து வருவதால், அவர்களுடன் காங்கிரஸில் வெற்றி பெறும் எம்.எல்.ஏக்களிடம் குதிரை பேரம் நடத்தி, தங்கள் வசம் இழுக்க பாஜக முயற்சி செய்யும் என்பதால், காங்கிரஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறபடுகிறது.   

ஜடேஜா மனைவி ரிபவா வெற்றி..!

குஜராத்தில் உள்ள ஜாம்நகர் வடக்கு தொகுதியில் களம் இறங்கிய முதல் தேர்தலியே இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிபவா ஜடேஜா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகியுள்ளார். இவர் மொத்தம் 57% வாக்குகள் பெற்றுள்ளார். 

தொடர்ந்து முன்னிலை வகிக்கும் காங்கிரஸ்..!

இமாச்சலில் ஆட்சியை உறுதி செய்யும் வகையில் காங்கிரஸ் கட்சி 39 இடங்களில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. 

இரு மாநில தேர்தல் முடிவுகள்..! சாதக பாதகம் யாருக்கு..?

இரு மாநிலங்களில் ஆட்சியில் இருந்துகொண்டு தேர்தலை எதிர் கொண்ட பாஜகவுக்கு இமாச்சல் கையைவிட்டுப் போகவுள்ளது. ஆனால் குஜராத்தில் வரலாறு காணத வெற்றியை பதிவு செய்யவுள்ளது. இதனால், ஒரு மாநிலத்தினை இழந்தாலும், அங்கு இழந்த தொகுதிகளுக்கு இணையான தொகுதிகளை குஜராத்தில் கைப்பற்றியுள்ளது. இதனால், பாஜகவுக்கு ஒரு மாநிலம் கையை விட்டு போனாலும், 2024 பாராளுமன்ற தேர்தலை முழு பலத்துடனே எதிர் கொள்ளும்  எனலாம். 

இமாச்சலில் வெற்றியை உறுதி செய்யும் காங்கிரஸ்..!

இமாச்சல் பிரதேசத்தில் வெற்றியை உறுதி செய்யும் வகையில் தொடர்ந்து 38 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்துவருகிறது. ஆட்சியை இழக்கும் பாஜக 27 இடங்களில் மட்டும் முன்னிலை வகித்துவருகிறது. 

காங்கிரஸுடன் கை கோர்த்து தலையை இழந்த ஜிக்னேஷ் மேவானி..?

சுயேட்சையாக களமிறங்கி குஜராத்தின் வட்கம் தொகுயின் சட்டமன்ற உறுப்பினரான ஜிக்னேஷ் மேவானி, இம்முறை காங்கிரஸில் தன்னை இணைத்துக்கொண்டு தேர்தலை எதிர்கொண்டதால், வட்கம் தொகுதியில் ஆரம்பம் முதலே பின்னடைவைச் சந்தித்து வருகிறார். அவர் பாஜகவின் மணிபாய் வகேலாவை விட 2,466 வாக்குகள் பின்தங்கியுள்ளார். 

காங்கிரஸ் 39; பாஜக 26..!

இமாச்சலில் ஆட்சியை பிடிக்கவுள்ள காங்கிரஸ் 39 இடங்களில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. 27 இடங்களில் முன்னிலை வகித்த பாஜக 26 இடங்களாக குறைந்துள்ளது. 

இமாச்சலில் ஆட்சி மாற்றம்..! அடுத்த 5 ஆண்டுகளும் குஜராத் பாஜக வசம்தான்..!

இமாச்சலில் ஆட்சியில் இருந்த பாஜக 27 இடங்களில் மட்டும் முன்னிலை வகித்து வருவதால், 38 இடங்களில் முன்னிலை வகிக்கும் காங்கிரஸுக்கு ஆட்சியை தாரைவார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 


குஜராத்தில் ஏற்கனவே 27 ஆண்டுகள் ஆட்சியில் உள்ள பாஜக, 152 இடங்களுக்கு மேலாக தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால், இமால வெற்றி பாஜகவுக்கு கைவசமாகவுள்ளது. 


இதனால் இரு மாநிலங்களிலும், இரண்டு கட்சியினரும் கொண்டாட்டமாக உள்ளனர். 

இமாச்சலை இழக்கும் பாஜக..!

38 இடங்களில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால் இமாச்சலில் ஆட்சியில் உள்ள பாஜக தோல்வியைத் தழுவவுள்ளது. 

2017லில் விட்டதை பிடித்த காங்கிரஸ்..!

இமாச்சலில் 2017ல் நடந்த பொதுத் தேர்தலில் 21 இடங்களை வென்று ஆட்சியை தவறவிட்ட காங்கிரஸ், தற்போதுவரை 37 இடங்களில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. 


குஜராத்தில் கடந்த முறை 99 இடங்களை வென்று ஆட்சியை பிடித்த பாஜக, தற்போதுவரை இமாலய வெற்றியைப் பெற152 இடங்களில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. 

குஜராத் வாக்கு எண்ணிக்கை... தற்போதைய நிலவரம் இதுதான்..

குஜராத் வாக்கு எண்ணிக்கை...  தற்போதைய நிலவரம் இதுதான்..





பாஜவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது..!

இமாச்சலில் 38 இடங்களில் காங்கிரஸ் தொடர்ந்து 38 இடங்களில் முன்னிலை வகித்து வருவதால் ஆட்சியை பிடிப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. 


குஜராத்தில் தொடக்கம் முதல் முன்னிலை வகித்த ஆளும் கட்சியான பாஜக, தற்போது 154 இடங்களில் முன்னிலை வகித்து வருவதால், இமாலய வெற்றியுடன் ஆட்சியை தக்கவைக்கவுள்ளது. 

பாஜக தலைவரின் சொந்த மாநிலத்தில் கொடி நாட்ட முன்னிலை வகிக்கும் காங்கிரஸ்..!

பாஜகவின் தேசிய தலைவரான ஜெ.பி. நட்டாவின்  சொந்த மாநிலமான இமாச்சல் பிரதேசத்தில் கொடி நாட்ட காங்கிரஸ் 38 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. 

காங்கிரஸ்.... இமாச்சலத்தில் 38... குஜராத்தில் 20...

இரு மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டு இருக்கையில் தற்போதுவரை காங்கிரஸ் இமாச்சலில் 38 இடங்களில் முன்னிலை வகித்து ஆட்சியை நோக்கி சென்று கொண்டுள்ளது. அதேபோல், குஜராத்தில் 20 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. 

ஓங்கும் காங்கிரஸ்..

இமாச்சலில் காங்கிரஸ் 38 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 27 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. 

இழுபறியாக உள்ள இமாச்சல்..!

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே இழுபறியாக இருந்து வருவதால், யார் வெற்றி பெறுவார்கள் என்பதற்கு முழுமையான தேர்தல் முடிவுகளுக்குப் பிறகே முடிவு செய்ய முடியும் நிலை உருவாகியுள்ளது.  

குஜராத்தில் பாஜக முதல்வர் மீண்டும் வெற்றி..!

குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேல் மீண்டும் 66337 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 

இமாச்சலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் வெற்றி..!

இமாச்சலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் ஜெய்ராம் தாக்கூர் 33256 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.  

பிரதமர் மோடி தொண்டர்களுடன் உரையாடல்..!

குஜராத் தேர்தல் முடிவுகளையொட்டி இன்று மாலை 6 மணிக்கு பிரதமர் மோடி தொண்டர்களிடையே உரையாற்றவுள்ளார். 


 





காங்கிரஸின் வாக்குகளை பிரித்த ஆம் ஆத்மி..!

கடந்த தேர்தலில் 77 இடங்களை வென்ற காங்கிரஸ் இம்முறை நடந்த மும்முனைப் போட்டியால், மிகவும் மோசமாக பின் வாங்கியுள்ளது. காங்கிரஸின் வாக்குகளை பெரும்பாலும் ஆம் ஆத்மி பிரித்துவிட்டதாக கூறப்படுகிறது. 

இமாச்சல் தேர்தல் முடிவுகள்..!

இமாச்சல் தேர்தல் முடிவுகள் காலை 11 மணி நிலவரம் இதுதான். 


 





இமாச்சலில் முன்னிலை வகிக்கும் பாஜக..!

இழுபறியாக இருந்த இமாச்சல் வாக்கு எண்ணிக்கையில் தற்போது பாஜக 34 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 31 இடங்களில் முன்னிலை வகிப்பதும் குறிப்பிடத்தக்கது. 

குஜராத் தேர்தல் நிலவரம்..!

குஜராத் தற்போதைய  தேர்தல் நிலவரம் இதுதான். 


 





வெற்றியைக் கொண்டாடத் தொடங்கிய பாஜகவினர்..!

குஜராத்தில் பாஜக தொடர்ந்து 150 இடங்களுக்கு மேல் முன்னிலை வகித்து வருவதால் பாஜகவினர் தற்போது இருந்தே வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர். 

குஜராத்தில் சாதனை படைக்க போகும் பாஜக..தொடர் தோல்வியில் காங்கிரஸ்..

குஜராத்தில் 151 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் 19 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 8 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.

இமாச்சலில் தொடரும் கடும் போட்டி..!

இமாச்சலில் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் பாஜகவிடையே கடும் போட்டி நிலவுகிறது. 


 





குஜராத்தில் மீண்டும் எடுபடாத காங்கிரஸ் வியூகம்..!

குஜராத்தில் காங்கிரஸ் 19 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. கடந்த 5 தேர்தலாக எடுபடாத காங்கிரஸின் தேர்தல் வியூகம் இந்த தேர்தலிலும், எடுபடவில்லை. 

இமாச்சலில் கடும் போட்டி..!

இமாச்சலில் கடும் போட்டி..! 


 





குஜராத் - ஜிக்னேஷ் மேவானி பின்னடைவு..!

குஜராத் வட்கம் தொகுதியில் களம் இறங்கிய காங்கிரஸ் கட்சியின் ஜிக்னேஷ் மேவானி பின்னடைவில் உள்ளார். 

இமாச்சலை கைப்பற்ற காங்கிரஸ் - பாஜக கடும் போட்டி...!

இமாச்சலில் காங்கிரஸ் பாஜக இருவரும் 33 இடங்களில் முன்னிலை வகித்து வருவதால், மக்கள் யார் பக்கம் என்பது இன்றூ மாலை தெரியவரும். 

ஆழம் தெரியாமல் காலைவிட்ட ஆம் ஆத்மி..!

குஜராத், இமாச்சலில் ஆழம் தெரியாமல் காலை விட்ட ஆம் ஆத்மி யுக்தி எடுபடவில்லை. குஜராத்தில், 9 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.  இமாச்சலில் ஒரு இடத்தில் கூட முன்னிலை வகிக்கவில்லை.  

குஜராத்தை தட்டி தூக்கும் பாஜக..?

27 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜக இம்முறையும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைப்பதற்கான பெரும்பான்மை இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. 

பாஜகவை நோக்கி குஜராத்..? காங்கிரஸ் வசமாகும் இமாச்சல்..?

குஜராத்தில் பாஜக 145 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இமாச்சலில் காங்கிரஸ் 34 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 

சரிசமமாய் மோதும் பாஜக, காங்கிரஸ்... இமாச்சலில் இது தான் நிலவரம்..!

இமாச்சலில் காங்கிரஸ் பாஜக சரிசமமாக 33 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 

இமாச்சலில் காங்கிரஸ் முன்னிலை..!

இமாச்சலில் காங்கிரஸ் 35 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 31 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. 

இமாச்சலில் முன்னிலை வகிக்கும் காங்கிரஸ்..!

இமாச்சலில் காங்கிராஸ் 36 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 31 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. 

ஆதிக்கம் செலுத்தும் பாஜக..!

குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜக 131 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 45 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. 

காங்கிரஸை ஓரம் கட்டிய பாஜக..!

குஜராத், இமாச்சலில் முன்னிலை வகித்து வரும் பாஜக காங்கிரஸை ஓரம் கட்டி வருகிறது. குஜராத்தில் 122 இடங்களிலும், இமாச்சலில் 34 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. 

எடுபடாத ஆம் ஆத்மி யுக்தி..!

பஞ்சாப்பைப் போல், குஜராத் மற்றும் இமாச்சலில் ஆம் ஆத்மியின் அலை வீசும் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில், இமாச்சலில் இன்னும் ஒரு இடத்தில் கூட ஆம் ஆத்மி முன்னிலை வகிக்கவில்லை. அதேபோல், குஜராத்தில் 3 இடங்களில் மட்டும் முன்னிலை வகித்து வருகிறது. 

இமாச்சலில் முன்னிலை வகிக்கும் காங்கிரஸ்..!

குஜராத்தில் காங்கிரஸ் தடுமாறினாலும், இமாச்சலில் பாஜகவிற்கு நெருக்கடி கொடுக்கும் அளவிற்கு முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 34 இடங்களிலும், பாஜக 33 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.  

குஜராத்தில் ஆதிக்கம் செலுத்தும் பாஜக..!

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே குஜராத்தில் பாஜக 127 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் 38 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. 

இமாச்சல் பாஜக காங்கிரஸ் போட்டா போட்டி..!

இமாச்சலில் பாஜக 22 தொகுதிகளிலும், காங்கிரஸ் 21 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறன. 

குஜராத்.. 101 இடங்களில் பாஜக முன்னிலை..

குஜராத் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக 101 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 24 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. 

இமாச்சல்... பாஜக முன்னிலை..!

இமாச்சல் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக 14 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. 

குஜராத்... பாஜக முன்னிலை..!

குஜராத் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக 58 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. 

இமாச்சலில் பாஜக முன்னிலை

இமாச்சல் பிரதேசத்தில் பாஜக 6 இடங்களிலும் காங்கிரஸ் 4 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. 

பாஜக முன்னிலை

குஜராத்தில் தபால் வாக்கு எண்ணிக்கையில் 33 தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. 

குஜராத், இமாச்சல் பிரதேச தேர்தல் வாக்கு எண்ணிக்கை

குஜராத், இமாச்சல் பிரதேச தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

Background

Gujarat, Himachal Pradesh Election Results 2022 LIVE: குஜராத் , இமாச்சல் பிரதேச சட்டபேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. 


ஏற்கனவே இரு மாநிலங்களிலும் ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதாவை ஆட்சி கட்டிலில் இருந்து காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இறக்குமா என்பதை இன்று எண்ணப்படும் வாக்கு எண்ணிக்கை தெளிவுபடுத்திவிடும். குறிப்பாக, 25 ஆண்டுகளுக்கு மேலாக குஜராத் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதாவானது, தொடர்ந்து வலிமையாகவே உள்ளது.  


 


இமாச்சல பிரதேசத்தில் மொத்தம் 68 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இந்த 68 தொகுதிகளுக்கும் கடந்த நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.


அதில், மொத்தம் 65.92 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.


இமாச்சலை பொறுத்தவரை, 1985க்கு பிறகு, பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் மாறி மாறி ஆட்சி அமைத்து வருகின்றன. ஆனால், இந்த முறை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் 5 முறை இமாச்சலின் முதலமைச்சராக பொறுப்பு வகித்தவருமான வீரபத்ர சிங் மறைவின் காரணமாக, அந்த போக்கு மாறும் என கூறப்படுகிறது.


குஜராத்


கிட்டத்தட்ட 25ஆண்டுகளுக்கு மேலாக பாஜக அங்கு ஆட்சியில் உள்ள நிலையில், ஏழாவது முறையாக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற வரலாறு படைக்க பாஜக முனைப்பு காட்டி தேர்தலில் களம் இறங்கியது.


குறிப்பாக பாஜக ஆட்சிக்கு எதிரான மனநிலையை எதிர்கொள்ள பல்வேறு மூத்த தலைவர்கள், தற்போதைய எம்எல்ஏக்களுக்கு தேர்தலில் போட்டியிட பாஜக தலைமை வாய்ப்பு அளிக்கவில்லை.  


1995ஆம் ஆண்டுக்கு பிறகு, காங்கிரஸ் கட்சியால் குஜராத்தில் ஆட்சி அமைக்கவே முடியவில்லை. ஆனால், 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கடும் போட்டிக்கு இடையே, பாஜக 99 இடங்களையும், பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் 77 இடங்களையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. குஜராத்தைப் பொறுத்தவரை பல ஆண்டுகளாகவே, கிராமப்புரங்களில் காங்கிரஸ் கட்சி வலுவாக காணப்படுகிறது. 


ஆளும் பாஜக, பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ், குஜராத் அரசியலில் புதிதாக குதித்துள்ள ஆம் ஆத்மி ஆகியவை ஒருவருக்கொருவர் கடுமையாக விமர்சித்து தாக்கி கொண்டன. 


படேல் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மாநிலம் முழுவதும் இரண்டு பெரிய போராட்டங்களை நடத்தியுள்ளனர். அது, தேர்தலில் எந்தளவுக்கு தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்பதை இன்று மாலை வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.


முதற்கட்டமாக, சவுராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத்தில் 19 மாவட்டங்களில் உள்ள 89 இடங்களுக்கு முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இரண்டாவது கட்டமாக மத்திய மற்றும் வடக்கு குஜராத்தில் உள்ள 93 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. முதற்கட்ட தேர்தலில், 63.3 சதவிகித வாக்குகளும் இரண்டாம் கட்ட தேர்தலில் 59.11 சதவிகித வாக்குகளும் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.