Breaking LIVE: வெள்ளிக்கிழமை ரெட் அலார்ட்; அதிகபட்சம் 20 செ.மீ மழை பெய்யும் என எச்சரிக்கை..!
Breaking LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு இணையதளத்தில் கீழே உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
டெல்லியை சேர்ந்த 26 வயதான பெண்ணின் 33 வார கருவை கலைக்க, டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பெருமூளையில் பாதிப்பை கொண்டுள்ள கருவை கலைக்க மருத்துவமனை அனுமதி மறுத்த போதிலும், கருவை கலைப்பது பற்றி தாய் எடுக்கும் முடிவே இறுதியானது என, நீதிபதி பிரதிபா சிங் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை 3 மாதங்களுக்கு ஒத்திவைக்க, மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆன்லைனில் தேர்தலை நடத்துவது தொடர்பான விதிமுறைகளை வகுக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.
பஞ்சாப்பின் தார்ன் தரன் பகுதியில் காலியா என்ற கிராமம் அருகே, பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் டிரோன் மூலம் 2.4 கிலோ எடை கொண்ட ஹெராயின் வகை போதை பொருள் கடத்தி வரப்பட்டது. இதனை கண்ட எல்லையில் ரோந்து மற்றும் பாதுகாப்பு படையில் ஈடுபட்டு இருந்த எல்லை பாதுகாப்பு படையினர். டிரோனை பறிமுதல் செய்தனர்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ரமேஷ் பவார் திரும்பப் பெறப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. தொடர்ந்து, தேசிய கிரிக்கெட் அகாடெமியின் தலைவர் வி.வி.எஸ் லட்சுமனனுடன் இணைந்து, ஆடவர் கிரிக்கெட் அணியை மறுசீரமைப்பதற்கன பணியில் ரமேஷ் பவார் ஈடுபட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக ரிஷிகேஷ் கனித்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி சூர்யா தான் பாஜகவில் இருந்து விலகுவதாக ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில் ”அண்ணன் அண்ணாமலைக்கு நன்றி, இத்துடன் பாஜகவுடனான உறவை முடித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
வரும் வெள்ளிக்கிழமை மிக மிக பலத்த மழை பெய்யும் என்பதால் அன்றைய தினம் தமிழ்நாட்டிற்கு ரெட் அலார்ட் விடப்பட்டுள்ளது.
நாளை நள்ளிரவு முதல் தமிழ்நாடு புதுச்சேரியில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிமுகவின் தொண்டர்களில் 98.5% தொண்டர்கள் பழனிச்சாமிக்கு ஆதரவாக உள்ளனர். மீதமுள்ள 1.5% தொண்டர்கள் தான் பன்னீர் செல்வதுக்கு ஆதரவாக உள்ளனர் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கல்லூரிக்கு நேரடியாகச் சென்று படிக்காமல், தொலைதூரக் கல்வி முறையில் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் கிடையாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கொலாம்பியாவில் நிலச்சரிவு ஏற்பட்டு 33 பேர் உயிரிழந்துள்ளனர்.
மறைந்த இந்திய அரசியல் அமைப்புச் சட்ட நிறுவனர் அம்பேத்கர் அவர்களின் 66வது நினைவு தினத்தினை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ரவி அவரது சிலையை திறந்து வைத்தார்.
ஆளுநரை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்பது சரியல்ல, ஆளுநருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்கத்தான் வேண்டும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை பேட்டியளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 8, 9 தேதிகளில் கடலோற மாவட்டங்கள் மற்றும் உட்புற தமிழ்நாட்டில் பரவாலன இடங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது.
திருவண்ணாமலை மகா தீபத்திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இருந்து திருவண்ணாமலைக்கு 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, தஞ்சை, கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புக்குழு விரைந்துள்ளது.
Background
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 199வது நாளாக மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ. 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
இதன்பின்னர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22 ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 199வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (டிசம்பர் 6 ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியிருந்தது. தற்போது கிட்டதட்ட விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை 200வது நாளை நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இனி எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையா..?
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை' 2030ஆம் ஆண்டிற்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
2025 இலக்கு:
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டிற்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -