Breaking LIVE : கரூர் மாநகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் சஸ்பெண்ட்; மாநகராட்சி ஆணையர் உத்தரவு
Breaking LIVE : நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் காணலாம்.
கரூரில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக சுக்காலியூர் பகுதியில் விஷ வாயு தாக்கி நான்கு பேர் உயிரிழந்த விவகாரத்தில், மாநகராட்சி நகர அமைப்பு ஆய்வாளர் தங்கமணியை சஸ்பெண்ட் செய்து மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
மேகதாது குறித்த ஆலோசனையும், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்க கூடாது என தமிழ்நாடு அரசு பதில் மனு. காவிரி விவகாரத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு செயல்படுவதாக, தமிழ்நாடு அரசு தனது பதில் மனுவில் தகவல்
பாஜகவில் காயத்ரி ரகுராம் வகித்துவரும் பொறுப்புகளில் இருந்து 6 மாதங்களுக்கு நீக்கம் - மாநில தலைவர் அண்ணாமலை
சென்னையில் உள்ள மாநகர் போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முற்றுகை. முற்றுகை போராட்டத்தின் போது ஓய்வு பெற்ற ஊழியர்கள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு
சென்னை இராணி மேரி கல்லூரியின் 104 ஆவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்துனராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாடி வருகிறார்.
தமிழ் அன்னையும் தேம்பி அழும் இழப்பு என அவ்வை நடராசன் மறைவு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பதிவு
சென்னையில் வெள்ளி விலை 50 காசுகள் உயர்ந்து ரூ. 67.00 ஆக விற்பனையாகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.66,700ஆக விற்பனையாகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.39,240 ஆக விற்பனையாகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ. 15 குறைந்து ரூ.4,905 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இலங்கை சிறையில் விடுவிக்கப்பட்ட ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 7 பேர் விமான மூலம் சென்னை வந்தடைந்தனர்.
காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக 6 மணி நேரத்தில் வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்கு வேறு. வேறு நிறங்களில் டிக் தர உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
திருவாரூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Background
இதுதொடர்பான அறிக்கையின்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இதேபோன்று, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை மற்றும் திருவாரூரிலும் மிதமான மழைக்கு பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு அருகில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்:
முன்னதாக, தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் உள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, சென்னைக்கு கிழக்கே 160 கிமீ தொலைவிலும், யாழ்ப்பாணத்திலிருந்து வட-வடகிழக்கே 410 கிமீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் தெற்கு ஆந்திரா-வட தமிழகம்-புதுச்சேரி கடற்கரையை நோக்கி காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நகர்ந்து, பிற்பகலுக்குள் படிப்படியாக வலுவிழந்து குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக மாற வாய்ப்புள்ளது எனவும் கணித்துள்ளது.
கனமழை எச்சரிக்கை:
இதன் காரணமாக, திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொருத்தவரை 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
ஆந்திர கடலோரப்பகுதிகள், தமிழக-புதுவை கடலோரப்பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும். மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -