Breaking LIVE: தொடரும் மழை..! நாளை திருவள்ளூர், செங்கல்பட்டு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!
Breaking LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு இணையதளத்தில் கீழே உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
செங்கல்பட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
2008ல் அமைச்சராக இருந்தபோது முறைகேட்டில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில், அமைச்சர் ஐ. பெரியசாமியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், வழக்கை சந்திக்கவும் உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
தொடர் கனமழையால் சென்னையில் இன்று அரைநாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழையால் சென்னையில் இன்று அரைநாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, கோவை, ஈரோடு, திருப்பத்தூர், சேலம், தர்மபுரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு அரைநாள்ம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் இன்று அரை நாள் விடுமுறை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்ப போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில், மக்களவை உறுப்பினரும் விசிக தலைவருமான திருமாவளவன் தலைமையில், இந்து மக்கள் கட்சியைக் கண்டித்து விசிகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் நண்பகல் 12 மணிக்கு ஏரியில் இருந்து 2,000 கனஅடி நீர் திறந்து விடப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
12 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, 2000 கன அடி நீர் திறப்பு
முல்லை பெரியாற்றில் புதிய தடுப்பணை கட்ட கேரள மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.
பாண்டிச்சேரி திமுக சட்டப்பேரவைத் தலைவரின் இல்லத் திருமணத்தில் பங்கேற்று பேசிய முதல்வர் ஸ்டாலின், புதுச்சேரியில் பொம்மை ஆட்சி நடைபெற்று வருகிறது என விமர்சனம் செய்துள்ளார்.
அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மிதமான மழைப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Ranipet: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருகிறது.
செங்கல்பட்டு - மதுராந்தகம் சாலையில் அரசுப் பேருந்தும் லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டதில் உள்ள அரக்கோணம், நெமிலி தாலுக்கா பகுதிகளுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கத்தில் காலை 9 மணி முதல் 1,000 கன அடி நீர் திறக்கப்படவுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் அடையாறு கரையோர மக்கள் கவனத்துடன் இருக்கும்படியும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் கனகம்மாபுரத்தினைச் சேர்ந்த அரசு பள்ளியை மழை நீர் சூழ்ந்துள்ளதால், மாணவர்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
மாண்டஸ் புயல் கரையைக் கடந்த பின்னரும் தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால், இன்று ஒருநாள் மட்டும், காஞ்சிபுரம் தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருவள்ளூர், ஊத்துக்கோட்டை பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Background
மாண்டஸ் புயல் எதிரொலியாக செங்கல்பட்டு மாவட்டத்தைக் காட்டிலும் காஞ்சிபுரம் பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது, குறிப்பாக காஞ்சிபுரம் பகுதியில் மட்டும் கடந்த இரண்டு நாட்களில் 20 சென்டிமீட்டர் அதிகமான மழை பெய்ததால், காஞ்சிபுரம் நகர் பகுதி வெள்ளக்கார காட்சியளிக்கிறது. காஞ்சிபுரம் நகரில் மையப் பகுதியில் செல்லும் வேகவதி ஆற்றில், சில ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் அதிக அளவு மழை பெய்து , நகரின் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், இன்று 12.12.2022 மழை காரணமாக காஞ்சிபுரம் தாலுக்கா உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது, மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (12.12.2022) பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 25 மாவட்டங்களில் மழை..? வானிலை மையம் கொடுத்த அப்டேட் இதுதான்..!
அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் 25 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, நாமக்கல், பெரம்பலூர், கரூர், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கடலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஓரிரு இடங்களில் மிதமான மழை இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைப்பொழிவு இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் பகுதியில் நாளை மறுநாள் (வரும் 13ஆம் தேதி) வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக மழைப்பொழிவு இருக்கும் எனவும், இது புயலாக மாறுமா? இல்லையா? என்பது வரும் காலங்களில் தான் தெரியும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மாண்டஸ் புயல் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு குறைந்துள்ளதால், தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இதன் காரணமாக, இன்று 11.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் 12.12.2022 மற்றும் 13.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
14.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -