Breaking News Live:ஆன்லைன் விளையாட்டு நடத்தும் நிறுவனங்களுக்கு வரைவு வழிமுறைகளை வெளியீடு

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு இணையதளத்தில் கீழே உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 02 Jan 2023 06:30 PM
ஆன்லைன் விளையாட்டு நடத்தும் நிறுவனங்களுக்கு வரைவு வழிமுறைகளை வெளியீடு

ஆன்லைன் விளையாட்டு நடத்தும் நிறுவனங்களுக்கு வரைவு வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது

Breaking News Live: இயந்திர கோளாறு காரணமாக மலேசிய செல்லும் விமானம் ரத்து - பயணிகள் அவதி

இயந்திர கோளாறு காரணமாக சென்னையில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு செல்லவிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ரத்து - 159 பயணிகளும் சென்னையில் உள்ள பல்வேறு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  

பஞ்சாப் முதலமைச்சர் வீட்டருகே வெடிகுண்டு கண்டெடுப்பு

பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் மான் வீட்டருகே வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

Breaking News Live: போலிச் சான்றிதழ்கள் - தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு 

பட்டியலினத்தவர், பழங்குடியினர் எனக் கூறி போலிச்சான்றிதழ்கள் பெறுவதை தடுக்க 8 வாரங்களில் விதிகளை வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றம்  அளித்த தீர்ப்புகளை அதிகாரிகளுக்கு தமிழக அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த  வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளது

Breaking News Live: புத்தாண்டு கொண்டாட்டம் - ரூ.26.28 லட்சம் அபராதம் வசூல்

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விதிகளை மீறி வாகனம் ஓட்டியதாக ரூ.26.28 லட்சம் அபராதம் வசூலித்த சென்னை காவல்துறை - இதில் அதிவேகமாக ஓட்டிச்சென்ற 69 பேரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

"ஜனவரி 3ஆம் தேதி முதல் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு"

தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில், ஜனவரி 3ஆம் தேதி முதல் ஜனவரி 6ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்க கோரிய வழக்கு முடித்துவைப்பு

தமிழ்நாடு அரசு, பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்க முடிவு எடுத்துள்ளதையடுத்து, கரும்பு வழங்க கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் முடித்துவைக்கப்பட்டது.

Breaking News Live : அ.தி.மு.க. இரட்டைத்தலைமை சர்ச்சை - மீண்டும் தேர்தல் ஆணையம் கடிதம் 

தலைமைத் தேர்தல் ஆணைய ஆவணங்களின்படியே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு தேர்தல் ஆணையம் மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளது.ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகளில் ஏதும் இல்லை என ஏற்கனவே கடிதத்தை திருப்பி அனுப்பியிருந்தது.


 

Breaking News Live : ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய எடப்பாடி பழனிசாமி கோரிக்கை!

கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Breaking Live : படகு மோதி நாகை மீனவர் உயிரிழப்பு

நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே விசைப்படகு மோதியதில் மீனவர் ராஜேந்திரன் உயிரிழந்துள்ளார். விசைப்படகு மோதியதில் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராஜேந்திரன் கடலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

Breaking Live : விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து - 10 பேர் காயம்

பாந்த்ரா-ஜோத்பூர் இடையிலான விரைவு ரயிலின் 11 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த ரயிலில் பயணம் செய்த 10 பேர் காயமடைந்துள்ளனர். 

Breaking Live : மெக்சிகோ சிறையில் துப்பாக்கிச் சூடு - 14 பேர் உயிரிழப்பு

மெக்சிகோ நாட்டின் சியுடாட் ஜுவரெஸில் உள்ள சிறைச்சாலையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். சிறையில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிறைக் கைதிகள் 24 பேர் தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Background

வைகுண்ட ஏகாதசி:


ஏகாதசி என்றால் 11வது நாள் என்று பொருள்படும். ஒரு மாதத்தில் வரும் வளர்பிறை தேய்பிறை என்னும் இரண்டு பட்சங்களிலும் வரும் 11வது நாள் ஏகாதசி. இந்தத் திதி இறைவழிபாட்டுகே உரியது என்பது ஆன்றோர்கள் கருத்து. இநாட்களில் நம்மைக் காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவை தியானம் செய்திருந்தால் அவனருள் நிறைந்து மனம் புத்துணர்ச்சி கொள்ளும். மேலும் ஏகாதசி நாளில் நாம் வழிபாடு செய்தால் மனதின் விருப்பங்கள் நிறைவேறும் என்றும் புராணங்கள் தெரிவிக்கின்றன.


திருப்பதியில் சொர்க்க வாசல் திறப்பு:


அந்த வகையில் ஏகாதசியின் தொடக்க நாளான இன்று, பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா பரவலால் 2 ஆண்டுகளுக்கு பிறகு வைகுண்ட ஏகாதசி வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று அதிகாலை 1.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சொர்க்கவாசல் திறப்புக்குப்பிறகு உற்சவர் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக எழுந்தருளினார்.


தொடர்ந்து, அதிகாலை 2 மணி முதல் 5 மணி வரை மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் விஐபி தரிசனத்தில் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அதைதொடர்ந்து பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக, ஏழுமலையான் கோவில் சுமார் 4 டன் மலர்களாலும், வண்ண சரவிளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.


இலவச டோக்கன் விநியோகம்:


வரும் 11-ம் தேதி இரவு 12 மணி வரை சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் திருப்பதியில் செய்யப்பட்டுள்ளன. இதற்கான இலவச டோக்கன்கள் திருப்பதியில் பிரத்யேகமாக 9 இடங்களில் அமைக்கப்பட்ட 96 கவுன்டர்களில் 4 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வழங்கப்படுகிறது. இந்த டோக்கன்களை பெறும் பக்தர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட தேதியில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.


பக்தர்களுக்கு அறிவுரை:


சொர்க்கவாசல் தரிசனத்துக்கு இலவச டோக்கன்களை பெறுவதற்காக வரும் பக்தர்கள் சிரமமின்றி அந்தந்த கவுன்டர்களுக்கு செல்லும் விதமாக திருப்பதி நகரின் பல்வேறு இடங்களில் இலவச டோக்கன்கள் வழங்கும்  கவுன்டர்களுக்கு செல்லும் விதமாக கியூஆர் கோடு  விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.


குறிப்பிட்ட நாட்களில் எந்தவித டிக்கெட் இல்லாத பக்தர்களும் திருமலையில் அனுமதிக்கப்பட்டாலும்,  எக்காரணத்தை கொண்டும் ஏழுமலையான் கோயிலில்  சொர்க்கவாசல் வழியாக சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க முடியாது என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், திருமலையில் உள்ள மற்ற பகுதிகளை பகதர்கள் சுற்றி பார்க்க செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ரங்கநாதர் கோயில்:


இதனிடையே, திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீரங்கநாதர் கோயிலிலும், இன்று அதிகாலை  சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதையடுத்து அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர். இந்து சமய அறநிலைய அமைச்சர் சேகர்பாபுவும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.


திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்:


வைகுண்ட ஏகாதசியையொட்டி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. அதன் வழியாக பார்த்தசாரதி பெருமாள் வந்து நம்மாழ்வாருக்கு காட்சி அளித்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என கோஷங்கள் எழுப்பினர். அதன்பிறகு அதிகாலை 5.30 மணி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.


இதனிடையே, விழுப்புரம் மாவட்டம்  வானூர் அருகே உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில், பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.