Breaking News LIVE : அடுத்த இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்

Breaking NEWS LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் காணலாம்.

ABP NADU Last Updated: 24 Jan 2023 02:03 PM

Background

தமிழ்நாட்டில் தொடர்ந்து 248வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகி வருவது வாகன ஓட்டிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர்...More

சித்த மருத்துவர் ஷர்மிகா பிப்.10ல் எழுத்துப்பூர்வமாக விளக்கமளிக்க உத்தரவு..

சித்த மருத்துவர் ஷர்மிகா உடல் எடை குறைப்பு, குழந்தை பிறப்பு குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தார்.  இது தொடர்பாக தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம் நோட்டீஸ் அனுப்பியதால் நேரில் விசாரணைக்கு ஆஜரானார். 


விசாரணையின் போது அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. இது தொடர்பாக வரும் பிப்.10ல் எழுத்துப்பூர்வமாக விளக்கமளிக்க உத்தரவு இடப்பட்டுள்ளது.