Breaking News LIVE: கலைஞர் கருணாநிதியின் அனைத்து நூல்களும் நாட்டுடைமை!

தமிழ்நாடு, இந்தியா மற்றும் உலகம் முழுவதும் இன்று நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை செய்திகளாக காணலாம்.

செல்வகுமார் Last Updated: 22 Aug 2024 08:09 PM
கோவை: மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு

கோவை: மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர் நடராஜன் சஸ்பெண்ட் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்த 4 பெண் ஆசிரியைகளிடம் விசாரணை தொடர்வதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி தகவல்

இ-பேருந்துகளுக்கு கட்டமைப்பை உருவாக்க ₹111.50 கோடி ஒதுக்கீடு செய்தும் உத்தரவு

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் 50% பேருந்துகளுக்கு வரவு - செலவு வித்தியாசத் தொகை நிதியாக ₹300 கோடியை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு. இதன் மூலம், பேருந்து பராமரிப்பு, எரிபொருள் மற்றும் இதர செலவுகள் ஈடு செய்யப்பட்டு சேவை சிறப்பாக இயங்க உறுதுணையாக இருக்கும் என தெரிவிப்பு மேலும், 6 பணிமனைகளில் கட்டடப் பணிகள் மற்றும் இ-பேருந்துகளுக்கு கட்டமைப்பை உருவாக்க ₹111.50 கோடி ஒதுக்கீடு செய்தும் உத்தரவு

Vazhai : வாழை , சினிமா காதலர்களால் கொண்டாடப்படும் - தனுஷ் பதிவு

கலைஞரின் அனைத்து நூல்களும் நாட்டுடைமை!

கலைஞரின் அனைத்து நூல்களும் நாட்டுடைமை!


மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நூல்கள் அனைத்தும் நூலுரிமை ஏதுமின்றி நாட்டுடைமையாக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

பாலியல் அத்துமீறல் : "மிகப்பெரிய தண்டனை வழங்க வேண்டும்" - அமைச்சர் அன்பில் மகேஷ்

"பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் நபர்களுக்கு மிகப்பெரிய தண்டனை வழங்க வேண்டும்" கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான கேள்விக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்.

விரைவில் காவிரி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் - முன்னாள் பிரதமர் தேவகவுடா Title

விரைவில் காவிரி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார். 



ஜம்மு காஷ்மீர் மக்களின் சோகம் - அச்சத்தை ஒழிப்பதை என் நோக்கம் - ராகுல் காந்தி

ஜம்மு காஷ்மீர் மக்களின் இதயத்தில் உள்ள சோகம், அச்சத்தை ஒழிப்பதை என் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 


 


ஜம்மு காஷ்மீருக்கு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த சினிமா பிரபலங்கள்..!

இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் படையப்பா பாடலை மேற்கோள் காட்டி வாழ்த்து கூறியுள்ளார். இயக்குனர் அட்லி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய் தன்னுடைய கட்சி கொடியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, வாழ்த்துக்கள் அண்ணா" என்று கூறியுள்ளார். அதேபோல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ள பதிவில், "வாழ்த்துக்கள் விஜய் அண்ணா"என்று கூறியுள்ளார். நடிகர் சிபி சத்யராஜ்,"தவெக கட்சி கொடியை அறிமுகப்படுத்திய அண்ணன் விஜய்க்கு வாழ்த்துக்கள். உங்கள் அனைத்து முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள்"என்று கூறியுள்ளார். அதேபோல் இயக்குனர் பார்த்திபன், நடிகர் சாந்தனு உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

படிப்பில் மட்டுமல்ல விளையாட்டிலும் சாதனை செய்ய வேண்டும் - உதயநிதி ஸ்டாலின்

இந்தியாவில் உயர்கல்வி படிக்கும் 50  சதவிகிதம் உயர்ந்துள்ளது தமிழ்நாட்டில்தான். இந்தியாவில் Top கல்லூரிகள் தமிழ்நாட்டில் தான் உள்ளது..


 அனைவரும் படிப்பில் மட்டும் இல்ல விளையாட்டிலும் சாதனை செய்ய வேண்டும்., மாணவிகளுக்கான PT வகுப்பை ஆசிரியர்கள் கடன் வாங்கி கணிதம் போன்ற பாடம் நடத்த வேண்டாம் என கோரிக்கை வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் உயிரிழப்பு விவகாரம்: பணிக்கு திரும்ப உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்..!

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் உயிரிழப்புக்கு நீதி கோரி மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் பணிக்கு திரும்ப வேண்டும் என  உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. போராட்டத்தால், மக்கள் பாதிக்கப்படுவதை கவனிக்காமல் இருக்க முடியாது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

Breaking News LIVE: மேட்டூர் அணை நிலவரம்!

காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 12,500 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 8,563 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 7,463 கன அடியாக குறைந்துள்ளது.

திருச்சி ரங்கநாதசுவாமி கோயிலில் முன்னாள் பிரதமர் தேவகவுடா சாமி தரிசனம்..!

மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா, திருச்சி ரங்கநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். 





Breaking News LIVE: தங்கம் விலை சரிவு!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu)


சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.53,440 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.6,680 விற்பனை ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை மாற்றமின்றி தொடர்கிறது.


24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.57,080 ஆகவும் கிராம் ஒன்று ரூ.7,135 ஆகவும் விற்பனையாகிறது.


வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai)


அதேபோல், சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலைரூ.92.00 க்கு விற்பனையாகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.92,000 ஆக விற்பனையாகிறது. 




 

Breaking News LIVE: த.வ.க. முதல் மாநில மாநாடு தேதி விரைவில் அறிவிப்பு!

பனையூர் அலுவலகத்தில் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார் விஜய். சிவப்பு, மஞ்சள் பின்னணியில் இரண்டு போர் யானைகள் கொண்டும் நடுவில் வாகைமலர் கொண்ட கட்சிக் கொடியை ஏற்றி அறிமுகம் செய்தார். அப்போது பேசிய விஜய்.” சந்தோஷமான ஒரு நாள்.  அரசியல் பயணத்தின் தொடக்கப் புள்ளியாக கட்சியின் பெயரை கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தேன். முதல் மாநில மாநாடு அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. தேதி பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிடுகிறேன்.”  என்று தெரிவித்தார்.

” நமது நாட்டின் ”...என தொடங்கி த.வெ.க கட்சியின் உறுதிமொழியேற்றார் விஜய்.!

” நமது நாட்டின் ”...என தொடங்கி த.வெ.க கட்சியின் உறுதிமொழியேற்றார் விஜய்.!



பனையூர் கட்சி அலுவலகம் வந்தடைந்தார் த.வெ.க தலைவர்: சற்று நேரத்தில் கொடியேற்றம்..!

பனையூர் கட்சி அலுவலகம் வந்தடைந்தார் த.வெ.க தலைவர், இன்னும் சற்று நேரத்தில் கொடியை அறிமுகம் செய்து, கொடியேற்றவுள்ளார். 

சென்னையே நமது சமத்துவபுரம் - சென்னை தினத்தையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து...

சென்னை நிலமாக மட்டுமல்ல, இந்த நிலத்தின் மீது வாழும் ஒவ்வொரு மனிதரின் உயிராகவும் இருக்கிறது,  வாழ்வு தேடி வந்த பலருக்கும் வசந்தத்தை வழங்கிட வா என்று தன் மடியோடு ஏந்திக்கொண்ட தாய் சென்னை!, இந்தத் தருமமிகு சென்னையே நமது சமத்துவபுரம்! பல கனவுகளை வெற்றிக் கதைகளாக எழுதிய - எழுதும் நம் சென்னையைக் கொண்டாடுவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 





கட்சிக் கொடியை அறிமுக செய்யும் விஜய் - தலைவர்கள் வாழ்த்து

தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை அறிமுகம் செய்யும் விஜய்க்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

கட்சி கொடியை அறிமுகம் செய்து வைக்கிறார் நடிகர் விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை சற்று நேரத்தில் அறிமுகம் செய்து வைக்கிறார் நடிகர் விஜய். இதற்காக வீட்டிலிருந்து பனையூர் அலுவலகத்திற்கு விஜய் புறப்பட்டுள்ளார். இந்த விழாவில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன், தாய் ஷோபா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். 

ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - அவசரமாக திருவனந்தபுரத்தில் தரையிறக்கம்

மும்பையில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து அவசரமாக திருவனந்தபுரத்தில் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, விமான நிலையத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 





த.வெ.க தலைவர் விஜய் மற்றும் அவரது கட்சியினர் எடுக்கப் போகும் உறுதிமொழி 
ஒகேனக்கல்லில் குளிப்பதற்கு 39வது நாளாக தடை நீட்டிப்பு

காவிரி நீரானது அதிகளவில் வந்து கொண்டிருப்பதால், ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு 39வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல்: எதிர்க்கட்சித் தலைவர்  ராகுல் காந்தி 2 நாள் பயணம்

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்  ராகுல் 2 நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் பயணம் மேற்கொள்கிறார். 

போலந்தில் பிரதமர் மோடி

பிரதமர் மோடி, 2 நாள் பயணமாக போலாந்து நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு இரு நாடுகளுக்கிடையேயான உறவு வலுப்படுத்துவது குறித்து பயணம் மேற்கொண்டிருக்கிறார். 

இன்று த. வெ. க கொடி, பாடல் அறிமுகம்

தமிழக வெற்றிக் கழகம் கட்சிக் கொடியை இன்று அறிமுகப்படுத்தி, கட்சி பாடலை வெளியிடுகிறார் நடிகர் விஜய். இந்தநிலையில் நடிகர் விஜய் இன்று அவரது பனையூர் அலுவலகத்தில்  கட்சிக் கொடியை அறிமுகப்படுத்த உள்ளார்.

Background

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.