தெலுங்கு, கன்னட மக்களின் புத்தாண்டான உகாதி திருநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள்  வாழ்த்து தெரிவித்துள்ளனர். 


குடியரசு துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு தெரிவித்த வாழ்த்து செய்தியில், "


உகாதி, குடி படாவா, சைத்ர சுக்லாதி, சேதி சந்த், வைசாகி, விசு, புத்தாண்டு, வைஷ்காதி மற்றும் போஹாக் பிஹூ’ ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு எனது அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்த பண்டிகைகள், பாரம்பரிய புத்தாண்டின் தொடக்கத்தை குறிக்கின்றன மற்றும் நாட்டின் கூட்டு கலாச்சாரம் மற்றும் வளமான பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கின்றன. 


ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலங்கானா மக்கள் இதை ‘உகாதி’ எனவும் மற்றும் கர்நாடக மக்கள் ‘யுகாதி’ எனவும் அழைக்கின்றனர்.  மகாராஷ்டிராவில், இது குடி படாவா என கொண்டாடப்படுகிறது மற்றும் தமிழ்நாட்டில் இது புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது.  கேரளாவில் நமது மலையாளி சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் ‘விஷூ’வாக கொண்டாடும் போது பஞ்சாப்பில் இது ‘வைஷாகி’ யாக கொண்டாப்படுகிறது.


ஒடிசாவில்  இது  ‘பனா சங்க்ராந்தியாக’ அழைக்கப்படுகிறது.  மேற்கு வங்கத்தில், ‘பொய்லா  பாய்சாக்’ புதிய ஆண்டில் தொடங்குகிறது  மற்றும் அசாமில், ‘போஹாக் பிஹூ’ புத்தாண்டின் தொடக்கத்தை குறிக்கிறது. பெயர்கள் வேறுபடுகின்றன ஆனால்,  இந்த பண்டிகையின் மகிழ்ச்சி, நம்பிக்கை மற்றும் ஒற்றுமை ஆகியவை ஒன்றாக இருக்கின்றன. 


நமது நாட்டில் பண்டிகைகள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடும் நிகழ்வாக எப்போதும் உள்ளது.  ஆனால், தற்போதைய கொவிட் தொற்று சூழலில், இந்த பண்டிகையை கொவிட் நெறிமுறைகளை பின்பற்றி கொண்டாட வேண்டும் என நாட்டு மக்களை கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார். 


எடப்பாடி பழனிசாமி வாழ்த்து:  


முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிட்டி வாழ்த்து செய்தியில், "  தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு எனது இதயம் கனிந்த யுகாதி தின நல்வாழ்த்துக்கள். இப்புத்தாண்டு உங்கள் அனைவரது வாழ்விலும் வளமும் நலமும் வழங்கும் ஆண்டாக மலரட்டும்" என்று தெரிவித்தார். 


கே.எஸ் அழகிரி வாழ்த்து: 


தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாழ்கிற தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் அனைத்து மக்களும் எல்லா நலன்களும், வளங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்திட, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் யுகாதி பண்டிகை நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்தார். 


டிடிவி தினகரன்:    


தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய யுகாதி புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.