விண்வெளியில் ஏஐ தரவு மையம் அமைக்க ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

Continues below advertisement

விண்வெளியில் ஏஐ தரவு மையம்

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களுக்கான தரவு மையங்கள் பூமியில் செயல்பட்டு வரும் நிலையில் கூடுதலாக அவற்றை விரிவுபடுத்துவற்கான இதற்கான நில எடுப்பு, தண்ணீர் பற்றாக்குறை மற்றும் மக்களின் எதிர்ப்பு உள்ளிட்டவற்றை சமாளிக்கும் நோக்கில் விண்வெளியில் தரவு மையத்தை அமைக்க திட்டம் முன்மொழியப்பட்டது.

10 லட்சம் செயற்கைக்கோள்களை ஏவ திட்டம்

இந்நிலையில் பிரபல தொழிலதிபரான எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளியில் ஏஐ தரவு மையம் அமைப்பதற்கான முன்னெடுப்பில் இறங்கிய நிலையில், 10 லட்சம் செயற்கைக்கோள்கள் மூலம் ஏஐ தரவு மையத்தை அமைப்பதற்கு அந்நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Continues below advertisement

இந்நிலையில் ஸ்டார் மைண்ட் எனக்குறிப்பிடப்படும் இத்திட்டம் குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க தேசிய தகவல் தொடர்பு ஆணையம், 2033-ஆம் ஆண்டுக்குள் முதல் செயற்கைக்கோளையும், 2040-க்குள் முழு செயற்கைக்கோள் தொகுப்பையும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளியில் செலுத்த வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் இத்திட்டத்தின் மூலம் பெறப்படும் தரவுகளை பயன்படுத்த கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இத்திட்டத்தால் விண்வெளியில் மாசு ஏற்படும் எனவும், பூமிக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடுமெனவும் பல நிறுவனங்கள் எதிர்ப்புக்களை பதிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.