சத்தமில்லாமல் உருவான வனம் திரைப்படம், சமீபத்தில் வெளியான ட்ரைலர் மூலம் அதிகம் கவனிக்கப்பட்டது. காடும், திகிலுமாக இருந்த வனம் திரைப்படம் ஒரு வித எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா வனம்?


பழமையான அரசு சிற்பக் கல்லூரியை மையமாக வைத்து தொடங்கப்படுகிறது படம். அங்கு முதலாமாண்டு படிக்கும் நாயகன் தங்கி இருக்கும் ஒரு அறையில் தொடர் தற்கொலைகள் நிகழ்கின்றன. அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கின்றனர். அதனை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார் நாயகன். அவருக்கு உதவியாக டாக்குமெண்ட்ரி எடுக்க வந்த நாயகியும் சேர்கிறார். மர்மத்தை விலக்க இருவரும் பயணம் செய்ய தோண்ட தோண்ட பல தகவல்கள் அவர்களுக்கு கிடைக்கிறது. தொடர் மரணங்களுக்கும், அவர்கள் கண்டுபிடித்த தகவல்களுக்கும் இடையேயான தொடர்பு என்ன? அமானுஷ்யங்கள் ஏன் நடக்கிறது என நாயகன் கண்டிபிடித்தாரா என வழக்கமான கேள்விகளுக்கு பதில் சொல்கிறது வனம் திரைப்படம்.




ப்ளஸ்:
வனம் என்ற தலைப்புக்கு ஏற்ப படம் வனத்திலேயே தொடங்குகிறது. பச்சை போர்த்திய காட்டை அழகாக கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் விக்ரம் மோகன். திகில் படத்துக்கான பலமே இசை என்பதை உணர்ந்து வேலை பார்த்துள்ளார் இசையமைப்பாளர் ரான் ஈத்தன். பின்னணி இசையில் ஜொலிக்கிறார். நாயகன் வெற்றி, நாயகி ஸ்மிருதி வெங்கட், அனு சித்தாரா, வேல ராமமூர்த்தி, அழகம் பெருமாள் போன்ற கதாபாத்திரங்கள் தங்கள் வேலையை மிகச்சரியாய் செய்துள்ளனர்.


மைனஸ்:
ட்ரைலர் கொடுத்த சுவாரஸ்யம் படம் கொடுக்கவில்லை. காடு, முன் ஜென்மம் என சுவாரஸ்ய கதைக்கருவை கொண்டு விறுவிறுப்பாக படம் தொடங்கினாலும் போகப்போக விறுவிறுப்பு குறைகிறது. திகில் பேண்டஸி படம் என்றாலும் படத்தில் திகிலே இல்லை. எளிதில் யூகிக்கக் கூடிய காட்சிகளாகவும், வலிந்து திணிக்கப்பட்ட சில காட்சிகளாலும் தடுமாறுகிறது வனம். முன்னணி கதாபாத்திரங்கள் மட்டுமே சரியாக வேலை பார்த்துள்ளனர். மற்ற நடிகர்களின் நடிப்பில் ரியாலிட்டியே இல்லை.  நாயகன் வெற்றி நல்ல நடிப்பை கொடுத்திருந்தாலும் அவரின் ரியாக்‌ஷனில் முந்தைய படங்கள் நினைவுக்கு வருகின்றன. திகிலையும், பேண்டஸையும் கையில் எழுத்த படக்குழு திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி மேலும் திகிலூட்டி இருக்கலாம் என்றே தோன்றுகிறது. 


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண