மேலும் அறிய

Leader Movie Review : லெஜண்ட் சரவணனின் லீடர் படம் எப்படி இருக்கு..இதோ முழு விமர்சனம்

Leader Movie Review : துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடித்துள்ள லீடர் படத்தின் முழு விமர்சனத்தை இங்கு பார்க்கலாம்

மகள் மீது அதீத பாசம் வைத்திருக்கும் தந்தை. அதே மகளுக்கு ஒரு ஆபத்து என்கையில் விஸ்வரூபம் எடுக்கும் தந்தை என வழக்கமான ஒரு கதையில் நிறைய ட்விஸ்ட்கள் மற்றும்  எக்கச்சகமான மாஸ் தருணங்களை வழங்குகிறது லீடர் திரைப்படம். 

லீடர் திரைப்பட விமர்சனம் 

நாயகனான சக்திவேல் (லெஜண்ட் சரவணன்) தூத்துக்குடியில் விடிவி கணேஷிடம் மெக்கானிக்காக வேலை செய்கிறார். மனைவியை இழந்த சக்திவேல் தனது ஒரே மகள் மீது பாசத்தை பொழிகிறார். போலீஸ் அதிகாரியான ஆன்ட்ரியா தூத்துக்குடி துறைமுகத்தில் நடக்கும் தீவிரவாத செயல்களை விசாரணை செய்யும் அதிகாரியாக வருகிறார். ஷியாம் அவரது உயர் அதிகாரியாக. இந்த தீவிரவாத போக்கை தடுக்க ஹார்பர் கான்ட்ராக்டரின் கார்களை சர்வீஸ் செய்து தரும் சரவணனை அவரது மகளை பகடைக்காயாக பயன்படுத்துகிறார் ஆன்ட்ரியா. யார் இந்த சக்திவேல். திருடன் போலீஸ் விளையாட்டில் சிக்கியவர் இவரா ? இல்லை போலீஸ் திருடனா என எக்கச்சக்கமான மாஸ் , எதிர்பாராத திருப்பங்களுடன் செல்கிறது லீடர் திரைப்படம் 

முதல் படத்தை காட்டிலும் நடிப்பில் முன்னேறி இருக்கிறார் லெஜண்ட் சரவணன். அவருக்கு மகளாக நடித்த இயல் நடிப்பு சிறப்பு , அன்ட்ரியா , ஷாம் இருவருக்கும் கதையில் போதுமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது அதை அவர்கள் சிறப்பாகவே செய்துள்ளார்கள். விடிவி கணேஷ் , அறந்தாங்கி நிஷா என நகைச்சுவை நடிகர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 

தந்தை மகள் பாசம் , சாதுவான நாயகனுக்குள் ஒளிந்திருக்கும் மாஸ் ஹீரோ , கொசு கடித்ததற்கு எல்லாம் போட்டுத்தள்ளும் வில்லன்  என வழக்கமான எலிவேஷன் டெம்பிளேட்டில் அமைந்திருக்கிறது முதல் பாதி. அதே நேரம் இரண்டாம் பாதி நாயகனின் பிளாஷ்பேக், ரொமான்ஸ் , எமோஷன் போன்ற அம்சங்களை கவர் செய்கிறது. யூகிக்கக் கூடிய திரைக்கதை என்றாலும் அவ்வப்போது எதிர்பாராத விதமாக வரும் சின்ன சின்ன ட்விஸ்ட்கள் சுவாரஸ்யத்தை கூட்டுகின்றன. காதல் , செண்டிமெண்ட் காட்சிகள் சுமாராக எழுதப்பட்டிருந்தாலும் ஆக்‌ஷன் காட்சிகள் மிக சிறப்பாக தொழில்நுட்ப நேர்த்தியுடன் எடுக்கப்பட்டிருக்கின்றன. சர்வதேச மாஃபியா , சீக்ரெட் ஏஜண்ட் , என பல கிளைக்கதைகளை சேர்த்து அதை அவசர அவசரமாக சொல்லிச் செல்வதால் இரண்டாம் பாதி சோர்வளிக்கிறது. நுட்பமாக உணர்வுகளுக்கு இசையமைக்கும் ஜிப்ரான் இந்த படத்திற்கு சவுண்டை ஏத்தியிருக்கிறார். பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன ஆனால் படத்தின் ஓட்டத்தில் கரைந்துவிடுகின்றன. ஒளிப்பதிவு மற்றும் சண்டைக்காட்சிகள் நம்பமுடியாத காட்சிகளை நம்பவைக்கின்றன.

லீடர் ஆக்‌ஷன் பட விரும்பிகளுக்கு ஒரு நல்ல விருந்து 

View More
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

சிக்ஸ் பேக் வைத்து ரெடியாகும் தனுஷின் மகன் யாத்ரா..ஜிவி பிரகாஷ் சொன்ன தகவல்
சிக்ஸ் பேக் வைத்து ரெடியாகும் தனுஷின் மகன் யாத்ரா..ஜிவி பிரகாஷ் சொன்ன தகவல்
திருநெல்வேலியில் ஜனநாயகன் பற்றி முதல்முறை பேசிய விஜய்...அடுத்த நாளே இணையத்தில் முழு படம்! யார் செய்த சதி ?
திருநெல்வேலியில் ஜனநாயகன் பற்றி முதல்முறை பேசிய விஜய்...அடுத்த நாளே இணையத்தில் முழு படம்! யார் செய்த சதி ?
JanaNayagan : இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்! அட ஓப்பனிங்கே எம்.ஜி.ஆர் ரெஃபரன்ஸா!
JanaNayagan : இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்! அட ஓப்பனிங்கே எம்.ஜி.ஆர் ரெஃபரன்ஸா!
மீண்டும் தொடரும் அரசன் படப்பிடிப்பு..தயாரிப்பாளர் ஐசரி கணேஷிடம் வாங்கிய முன்பணத்தை திருப்பி தர சிம்பு முடிவு
மீண்டும் தொடரும் அரசன் படப்பிடிப்பு..தயாரிப்பாளர் ஐசரி கணேஷிடம் வாங்கிய முன்பணத்தை திருப்பி தர சிம்பு முடிவு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran Israel War: அடிக்கு அடி தான்..! அடுத்த கட்டத்துக்கு போயாச்சு - ஈரான் வார்னிங், ரொம்ப மோசம் என ட்ரம்ப் கவலை
US Iran Israel War: அடிக்கு அடி தான்..! அடுத்த கட்டத்துக்கு போயாச்சு - ஈரான் வார்னிங், ரொம்ப மோசம் என ட்ரம்ப் கவலை
Puducherry Election 2026: வாக்குப்பதிவில் வரலாறு படைத்த பாண்டிச்சேரி! காரணம் என்ன?
Puducherry Election 2026: வாக்குப்பதிவில் வரலாறு படைத்த பாண்டிச்சேரி! காரணம் என்ன?
கல்லூரி மாணவர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு குவிஸ் போட்டி: ரூ.30,000 பரிசு- சூப்பர் வாய்ப்பு!
கல்லூரி மாணவர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு குவிஸ் போட்டி: ரூ.30,000 பரிசு- சூப்பர் வாய்ப்பு!
“விஜய் ஒரு முதிர்ச்சியற்ற அரசியல்வாதி” - துணை முதல்வர் கடும் விமர்சனம்
“விஜய் ஒரு முதிர்ச்சியற்ற அரசியல்வாதி” - துணை முதல்வர் கடும் விமர்சனம்
Assembly Election 2026: மாறும் வரலாறு! புதுச்சேரியில் மதியம் 1 மணிக்கே 55% தாண்டிய வாக்குப்பதிவு- எவ்வளவு தெரியுமா?
Assembly Election 2026: மாறும் வரலாறு! புதுச்சேரியில் மதியம் 1 மணிக்கே 55% தாண்டிய வாக்குப்பதிவு- எவ்வளவு தெரியுமா?
Hormuz Toll Tax: கச்சா எண்ணெய்; ஈரான் வசூல் வேட்டை; ஒரு பீப்பாய்க்கு ஒரு டாலர் சுங்கக் கட்டணம்; ஒரு கப்பலில் எத்தனை.?
கச்சா எண்ணெய்; ஈரான் வசூல் வேட்டை; ஒரு பீப்பாய்க்கு ஒரு டாலர் சுங்கக் கட்டணம்; ஒரு கப்பலில் எத்தனை.?
Ducati: உலகின் மிகக் குறைந்த எடையில் சூப்பர் பைக்- காற்றில் மிதக்கும் வேகம்! களமிறக்கிய டுகாட்டி- விலை எவ்ளோ?
Ducati: உலகின் மிகக் குறைந்த எடையில் சூப்பர் பைக்- காற்றில் மிதக்கும் வேகம்! களமிறக்கிய டுகாட்டி- விலை எவ்ளோ?
Abbas Araghchi Vs Netanyahu: அப்போ எல்லாரும் சொன்னது உண்மைதானா.? இஸ்ரேல் தான் கல்ப்ரிட்; உண்மையை உடைத்த அரக்சி
அப்போ எல்லாரும் சொன்னது உண்மைதானா.? இஸ்ரேல் தான் கல்ப்ரிட்; உண்மையை உடைத்த அரக்சி
Embed widget