தலைமுடி நீளமாக, பார்ப்பதற்கு கவர்ச்சியாகவும், அடர் நிற கருப்பாகவும் , எல்லா வயதிலும் நரை முடி வராமல் வைத்து கொள்ள அனைவர்க்கும் ஆசை இருக்கும் தான். ஆனால் அனைவருக்கு இது போன்ற முடி அமைவதில்லை. இது போன்ற முடி இருப்பதற்கு உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் மற்றும் சுற்றுசூழல் போன்ற காரணிகள் முக்கிய காரணமாக இருக்கும்.


 


முடி உதிர்தல் பிரச்சனை தினம் இருக்க தான் செய்யும். நிபுணர்களின் பரிந்துரையின் படி ஒரு நாளைக்கு 50-70 முடிகள் உதிரும். முடி வளர்ச்சி சுழற்சி முறையில் நிகழும் போது முடி வளர்தல் முடி உதிர்தல் போன்ற படி நிலைகள் தொடர்ந்து நடைபெறும். ஆனால் அளவுக்கு அதிகமாக முடி உதிர்தல் பிரச்சனை இருந்தால் அது பல்வேறு உடல் பிரச்சனைகளின் அறிகுறியாகவும் இருக்கும்.





  • மனஅழுத்தம், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, நரம்பியல் பிரச்சனை இருந்தால் முடி உதிர்தல் வறண்டு இருக்கும். முடி வறண்டு , அதிகமாக இருந்தால் இது போன்ற பிரச்சனைகளுக்கு அறிகுறியாக இருக்கும்.

  • சரும ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்களுக்கு, தலையில் அரிப்பு, பத்து படித்தால், வெள்ளை, மஞ்சள் நிறத்தில் பத்து படிந்து இருக்கும்.

  • காய்ச்சல், நீரிழிவு , உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் இருந்தால் தலை சீவும் போது முடி அதிகமாக உதிரும்.

  • இள வயதில் தலை முடி நரைத்து போயி இருந்தால் அது மரபணு காரணமாக இருக்கலாம். அல்லது இளம் வயதில் எடுத்து கொள்ளும் உணவு முறை முக்கிய காரணமாக இருக்கும். சிலருக்கு ஏதேனும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும், சீக்கிரம் முடி நரைத்து விடும்.





  • கூந்தலுக்கு இரசாயணங்கள் பூசுவதும், வண்ணங்கள் மாற்றி பூசி கொள்வதும். முடி உதிர்வதற்கு காரணமாக அமையும். முடி உதிர்தல், முடி வறண்டு போதல், தலையில் பொடுகு பிரச்சனை, போன்றவை வரலாம்.

  • சுற்றுசூழல் இருக்கும் தூசு, மற்றும் மாசு காரணமாகவும்,முடி உதிரும்.

  • ஊட்டச்சத்து குறைபாடு இருப்பவர்கள், மற்றும் தைராய்டு குறைபாடு இருப்பவர்களுக்கு முடி உதிரும். முடி அதிக வறட்சியுடன் இருக்கும்.





  • முடி வேருடன் அதிகம் உதிர்வதால், ஹார்மோன் குறைபாடு, மற்றும் மாத விடாய் சுழற்சியில் மாற்றம் இருக்கலாம்.


முடி, சாதாரணமாக நினைத்து கொள்ளாதீர்கள் இது அழகுக்காக மட்டும் வளர்வதில்லை. இதில் ஆரோக்கியம் சேர்ந்து இருக்கிறது. வாழ்வியல் முறை மாற்றம், ஊட்டச்சத்து மிக்க உணவுகள் மனஅழுத்தம் இல்லாத சூழல் ஆகியவை கூந்தல் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது