யோகா தினத்தில் மட்டும் தான் யோகா செய்ய வேண்டுமென்பதில்லை. யோகா என்பது ஒரு குறிப்பிட்ட உணவை உட்கொள்வது, ஒரு குறிப்பிட்ட உடல் தோரணையை வைத்திருப்பது, சுவாச நுட்பங்களைப் பயிற்சி செய்வது போன்ற உடற்பயிற்சியின் ஒரு வடிவமாகும்.
யோகாவின் முக்கியத்துவம் மற்றும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு, 8வது சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படுகிறது.
'மனிதகுலத்திற்கான யோகா' என்பது இந்த ஆண்டு சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருளாகும். தொற்றுநோய்கள் நமது உடல் ஆரோக்கியத்தில் கடினமான விளைவுகளை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், அவை நமது மன ஆரோக்கியத்திலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதன் விளைவாக, மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற உடல்நலப் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. எனவே, மனநலக் கவலைகளை நிவர்த்தி செய்ய வேண்டிய தேவை அதிகரித்துள்ளது, அத்தகைய சூழ்நிலையில் யோகாவைத் தழுவுவது அவசியமாகிவிட்டது.
சர்வதேச யோகா தினத்தில் ஒவ்வோர் ஆண்டும், யோகா ஸ்டுடியோக்கள் அல்லது பிற பொது இடங்களில் ஒன்றாக யோகா பயிற்சி செய்வதற்காக மக்கள் கூடுகிறார்கள். யோகாவின் பல நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அனுஷ்கா சொல்லும் டிப்ஸ்:
யோகா தினத்தை ஒட்டி பிரபல யோகா ட்ரெய்னரனா அனுஷ்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில யோகாசனங்களைப் பகிர்ந்துள்ளார். அத்துடன் அவர் பதிவிட்ட குறிப்பில், அடுத்தமுறை நீங்கள் உங்களுக்குப் பிடித்தமான டிவி ஷோவைப் பார்க்கும்போது பாப்கார்னை தள்ளிவைத்துவிட்டு இதுபோன்ற எளிமையான ஆசனங்களைச் செய்யவும். அப்படியென்றால் ஃபிட்டாகவும் இருக்கலாம் ஆரோக்கியமாகவும் இருக்கலாம் என்று கூறியுள்ளார். அதில் அவர் மலாசானா, பத்ராசனா, அர்த்தமத்யேஸ்ந்திரா, கோமுகாசனா, அர்த்தசந்திராசனா போன்ற எளிமையான உட்கார்ந்த இடத்திலேயே செய்யும் ஆசனங்களை செய்து காட்டியுள்ளார். அனுஷ்கா பர்வானி என்ற அவர் சர்டிஃபைட் யோகா ட்ரெய்னர். அனுஷ்கா யோகா என்ற மையத்தை நடத்தி வருகிறார்.
சர்வதேச யோகா தினத்தின் வரலாறு:
பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 27, 2014 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் தனது உரையின் போது சர்வதேச யோகா தினம் பற்றிய திட்டங்களை முதன்முதலில் முன்வைத்தார். சர்வதேச யோகா தினம் ஜூன் 21ஆம் தேதி கொண்டாடப்படும் என ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை டிசம்பர் 11, 2014ஆம் ஆண்டு அன்று அறிவித்தது. 2015 ஆம் ஆண்டிலிருந்து, சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படுகிறது.