30 வயதான அக்ரிமா நாயர் சர்வதேச யோகா தினமான ஜூன் 21 இன்று தனிப் பயணத்திற்கு தயாராகி வருகிறார்.


தனது பதினேழு வயதில் தனது தந்தை தனியாகப் பயணம் செய்யக் கற்றுக்கொள் எனச் சொன்னதை மனதில் ஏற்றிக் கொண்ட சிறுமி தற்போது வளர்ந்து பெண்ணானதும் லடாக்குக்கு சைக்கிளில் தனியாகப் பயணமாக உள்ளார். 30 வயதான அக்ரிமா சர்வதேச யோகா தினமான ஜூன் 21 ஆம் தேதியான இன்று தனிப் பயணத்திற்கு தயாராகி வருகிறார்.


இது வெறும் சாகசப் பயணம் அல்ல. அவர் தான் செல்லும் வழியில் யோகா கற்பிக்க உள்ளார். இந்திய யோகா சங்கத்துடன் கலந்துரையாடிய பிறகு கொங்கன் கடற்கரை சாலை வழியாகப் பயணம் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் யோகா வகுப்புகள் அவரால் நடத்தப்படும்.






Model: Instagram


அக்ரிமாவின் தந்தை நாக்பூரில் மிலிட்டரியில் செவிலியராகப் பணிபுரிந்தார். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட தனிப்பயணங்களை அக்ரிமா மேற்கொண்டுள்ளார். புனே முதல் பெங்களூருவுக்கு அப்படியான தனிப்பயணத்தை சைக்கிளிலேயே மேற்கொண்டுள்ளார் அக்ரிமா.


உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் பட்டப்படிப்பு படிக்கும் போது அக்ரிமா யோகா கற்றுக்கொண்டார். யோகா மூலம் அவரது உடல் பிரச்சினைகள் முற்றிலும் குணமாகின. இதையடுத்து அவர் யோகாவில் முதுகலைப் பட்டம் பெற்றார். மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட்டில் MBA பட்டமும் பெற்றுள்ளார். இவரது பயணத்தின் தொடக்கம் இன்று (20 ஜூன் 2022) காலை 7.45 மணிக்கு வடுதலை சின்மயா பள்ளியில் நடைபெற்றது. தற்போது அக்ரிமா நரம்பியல் அறிவியலில் முனைவர் பட்டத்துக்குப் படித்து வருகிறார்.


பயணத்துக்காக தனது சைக்கிளை 1 லட்சம் ரூபாய் செலவிட்டு தயாரித்து வருகிறார். முழுவதும் பகலில் மட்டுமே பயணிக்க உள்ளார்.