யோகா ஆசனங்களுக்கு சரியான தோரணை எவ்வளவு முக்கியமோ, சரியான உணவைப் பின்பற்றுவதும் அவசியம். யோகாவில் உணவுமுறை முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமான உணவைப் பராமரிப்பது, ஒருவர் பின்பற்றும் யோகா முறையின் பலன்களை கூட்டுவதற்கும்,வலுப்படுத்துவதற்கும் மிகவும் உதவியாக இருக்கும். ஒரு யோகா உணவுமுறையானது இயற்கையான, பதப்படுத்தப்படாத உணவுகளை உட்கொள்வதை வலியுறுத்துகிறது.இது அஹிம்சை, சத்வா மற்றும் சௌசத்தின் யோகக் கொள்கைகளைப் பொறுத்து முழுமையான வளர்ச்சிக்கு பங்களிக்கும்.
அஹிம்சை என்பது அனைத்து உயிரினங்களும் பொதுவானது, உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்காமல் இருந்தால் உலகம் சிறந்ததாக இருக்கும் என்ற கருத்து உள்ளது. சத்வா என்றால் சமநிலையான சூழல், சாத்வீக உணவில் உள்ள சத்துக்கள் அமைதியான இதயத்தையும் தெளிவான மனதையும் ஊக்குவிக்கிறது. சௌச்சா என்பது தூய்மை எனப் பொருள். மேலும் தூய்மையை வழக்கமாக்கிக் கொள்ளுதல் என்பதைக் குறிப்பிடுவது. இதை மேம்படுத்துவதற்கான ஒரு எளிய வழி, கரிம உணவுகளை உட்கொள்வதன் மூலம் உங்கள் உடலில் உள்ள அசுத்தங்களைக் குறைப்பதாகும்.
யோகா உணவு என்பது புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற முழு பதப்படுத்தப்படாத உணவுகளை உண்ணும் ஒரு பழங்கால முறையாகும். யோகா உணவுமுறையை பின்பற்றுவதற்கான வழிகள்
1) புதிய பருவகால உணவுகளை உண்ணுங்கள் - அந்தந்த பருவத்தில் இருக்கும் புதிய விளைபொருட்களை வாங்கி உட்கொள்ளுங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு அல்லது பேக் செய்யப்பட்ட பொருட்களை ஆர்கானிக் என்று முத்திரை குத்தப்பட்டிருந்தாலும் தவிர்க்கவும்.
2) சைவ உணவு பழக்கம் - இது யோகா உணவு முறையின் இன்றியமையாத பகுதியாகும். நாம் முழுவதும் சைவ உணவையே உட்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
3) ஆசன பயிற்சி அல்லது தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் சாப்பிடுங்கள்
4) சீரான இடைவெளியில் சாப்பிடுங்கள் மற்றும் உணவுக்கு இடையில் இடைவெளி விடுவது அவசியம்
5) உண்ணாவிரதத்தின் நோக்கம் உடலை சுத்தப்படுத்துவது, ஆன்மீக இலக்கை தேடுவது அல்லது பக்தியை வெளிப்படுத்துவது என்று கருதுங்கள்
யோகாவின் ஆரோக்கிய நன்மைகள்:
யோகா உணவுமுறையின் மூலம் தாவர அடிப்படையிலான முழு உணவு முறையைப் பின்பற்றுவது உடலின் அனைத்து அமைப்புகளுக்கும் ஊட்டமளிப்பதற்கான அடித்தளமாகும்.
1. செரிமானத்தை மேம்படுத்துகிறது.
2. உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
3. உங்கள் ஆற்றலை அதிகரிக்கிறது.
4. நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
5. உங்கள் மனநிலையை மேம்படுத்துகிறது.